இடுகைகள்

ript data-ad-client="pub-3928212912467022" async src="https://pagead2.googlesyndication .com/pagead/

அதிரசம் எப்படி செய்யலாம் வாங்க

 பச்சரிசி ஒரு கிலோ தண்ணீர் விட்டு அலசி. கொஞ்ச நேரம் அந்த ஈரம் வெளில போற அளவுக்கு கொஞ்ச நேரம் வெள்ளைத்துணியில் போடுங்க.பிறகு ஒரு பாத்திரத்தில் மாத்துஙக. மெஷின்ல். அப்படி இல்லேன்னா நம்ம மிக்ஸியில் போட்டு அரைத்துங்க. அரைக்கும் போது கொரகொரப்பாக இருக்கலாம். அப்பதான் நல்லா இருக்கும்.உங்க விருப்பம்அரைத்துமுடிஞ்சதும்வெறும் வாணலியில் லேசாக வருத்துக்கனும். வெல்லம் 400 கிராம் இனிப்பு அதிகம் தேவைன்ன 500 கிராம். சுத்த பண்ணிட்டு பாகு காய்ச்சி.நல்லா கெட்டியானதும்.ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து அடுப்பில் இருக்கும் அந்த வெல்லப்பாகு கொஞ்சம் எடுத்து.அந்த கிண்ணத்தில் ஒரு துளி போடுங்க.அதுல விட்டத்துக்கு அப்புறம் ஒரு ரெண்டு செகண்ட் வெயிட் பண்ணுங்க அதுக்கப்புறம் கையில எடுத்து உருண்டு பந்து மாதிரி அது உருண்டு வரும் அந்த வெல்லப்பாகை இறக்கி விட்டு நீங்க மாவு பண்ணி வச்சிருக்கும். மாவை எடுத்து வெல்லப்பாகுடன் ஏலக்காய் 20 கிராம்.சேர்த்து நல்ல கிளறி விடுங்க. அப்படியே நல்ல கிளறி விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைத்துவிடுங்கள். அதிரசமாவு ரெடி. அந்த அதிரச மாவை ஒரு நாள் நல்லா ஊறவிடுங்க.ஒரு நாளைக்கு பிறகு நீங்க என்ன

பூண்டு வெங்காயம் அரைத்து விட்ட கார குழம்பு

 கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விடுங்க.காய்ந்ததும் மிளகு சீரகம் தலா 2 ஸ்பூன். உளுத்தம்பருப்பு.துவரம் பருப்புதலா1டீஸ்பூன்.கறிவேப்பிலை ஒரு சிறிதளவு வெந்தயம் அரை டீஸ்பூன் மிளகாய் 5. இவை அனைத்தையும் நன்றாக வறுத்து ஆற வைத்து.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நைசாக தண்ணீர் விடாமல் பவுடராக அரைக்கவும். சிறிதளவு புளி ஊற வைக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் 3 கரண்டி விட்டு எண்ணெய் காய்ந்ததும். கடுகு.வெந்தயம். சீரகம்தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை சேர்த்து வதக்கவும அதனுடன் வெங்காயம் உரித்து சுத்தம் செய்து ஒரு கப்.பூண்டு 2 கப். தக்காளி2 நன்றாக கழுவி  நைஸாக அரிந்து. அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து ஒரு கப் எடுத்து அதில் சேர்த்து. சிறிதளவு உப்பு. வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்றாக 15 நிமிடம் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சூப்பரான வெங்காயம் பூண்டு அரைத்துவிட்ட குழம்பு ரெடி. இட்லி. தோசை. சாதம். கோதுமை தோசை. ரவா தோசை. கல் தோசை இவை அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.

WWW.kalaireal.xyz

 WWW.kalaireal.xyzஎன்னுடைய இந்த பிளாக் சமையல் பகுதியில்.நிறைப பேர் ஈசியா எப்படி இனிப்பு. காரம். செய்வது பற்றி கேட்கிறாங்க.படிக்கற வேலை .எக்ஸாம் காரணமாக  போஸ்ட் போடமுடியவில்லை இனிமேல் அதிகமான போஸ்ட் பார்க்கலாம்.....‌‌‌‌,

பூண்டு தக்காளி சட்னி எப்படி செய்வது வாங்க

 வாணலியை அடுப்பில் வையுங்க. எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு காய்ந்ததும்.10 காய்ந்த மிளகாய்.2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு .பூண்டு 15 பல். தக்காளி-3 .உப்பு தேவையான அளவு  இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு தட்டில் ஆறவைக்கவும்.பிறகு  மிக்ஸி ஜாரில் நைஸாக அரைக்கவும் சூப்பரான பூண்டு தக்காளி சட்னி ரெடி

மீல்மேக்கர் குழம்பு எப்படி செய்வது

 பிரஷர்பான்அடுப்பில் வைத்து. 2ஸ்பூன் எண்ணைய் விடுங்க. காய்ந்ததும் பிரிஞ்சி இலை. பட்டை. 2 வெங்காயத்தை நைசாக நறுக்கி அதில் சேர்த்து வதக்குங்க. 4 தக்காளி நைசாக நறுக்கி வதக்கவும். இஞ்சிபூண்டு1டீஸ்பூன். தக்காளியுடன் சேர்த்து வதக்குங்கள் வெண்ணீரில் மீல்மேக்கரை 5 நிமிஷம் போட்டு பிழிந்து மீல்மேக்கரை போட்டு வதக்குங்க. தேவையான அளவு உப்பு..மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் மிளகாய்த்தூள் சேர்த்து10நிமிடம் கொதிக்கவிடுங்க.பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வையுங்க.மீல்மேக்கர் குழம்புரெடி.

கொழுக்கட்டை.

 உளுத்தம்பருப்பு கால் கப் எடுத்து தண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில் ஜாரின் 4 பச்சை மிளகாய். இந்த உளுத்தம்பருப்பு உப்பு வைத்து. கொரகொரப்பாக அரைத்து .வாணலியை அடுப்பில் வைத்து. கடுகு. உளுந்து‌ கருவேப்பிலை. போட்டு வதக்குங்க.அதில் அரைத்து வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை கலந்திடுங்க. வெந்து போயிடும். அரை மூடி தேங்காயைத் துருவி அதில் கலந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வையுங்க. இனிப்பு கொழுக்கட்டை எப்படி பண்றதுன்னு பார்த்தோம். அது போல தான் இந்த கார கொழுக்கட்டையும் செய்யனும்.மாவு ரெடி செய்து இந்த கார பூரணத்தை உள்ளே வைத்து மூடி வேக வைத்து எடுங்க கார கொழுக்கட்டை ரெடி.

மோதகம்.... பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் ஸ்வீட் எப்படி பண்றதுனு பார்க்கலாம் வாங்க

4 ஸ்பூன் கடலை பருப்பு. குக்கரில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு .அரை பதத்துக்கு வேக விடுங்க. வெயிட் போடாமல் ஒரு அஞ்சு நிமிஷம் வெச்சாலே போதும் வெந்த பருப்பை ஆறியதும் மிக்சியில் நைசாக அடிச்சுருங்க. தேங்காய் 2 கப். வெல்லம் 2 கப். எல்லாம் சுத்தம் பண்ணி எடுத்து வச்சுக்குங்க. அடுப்பில் அடி கனமாக உள்ள கடாய்  வையுங்க. வெச்சிட்டு வெள்ளம் கொஞ்சம் தண்ணி விட்டு கரைந்ததும். தேங்காய்  சேருங்க .கொஞ்சம் நல்ல திக்கானதும் அடுப்பை நிறுத்திட்டு இந்த கடலை பருப்பு சேர்த்து நல்லா கிண்டுங்க‌ அதுக்கப்புறமா அடுப்பு பத்த வைச்சு.நல்லா திரண்டு வரும் போது.அதில்10கிராம் ஏலக்காய்த் தூள்.2 ஸ்பூன் நெய் விடுங்க.சுருண்டு சீக்கிரமேபூரணம் ரெடியாயிடும் பூரணம்.ரெடியானதும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வச்சிருங்க.பிறகு நம்ம மாவு ரெடி பண்ணனும் ஒரு பாத்திரத்தில் ஒன்னேகால் டாம்ளருக்கு தண்ணீர் ஊற்றி நல்லா கொதி வரும்போது. அரை உப்பு போடுங்க.1 ஸ்பூன் நல்லெண்ணைய் விடுங்க.அடுப்பைஆஃப் பண்ணிட்டு‌‌.ஒரு டம்ளர் பச்சரிசி மாவை அதில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து.கட்டி இல்லாமல் நன்கு கிளறிவிட்டு.அடுப்பில் வைத்து கொஞ்சம் நேரம் வேகவையுங்க.வெந்ததும் இறக்கி வச்