இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழைப்பூ தோசை

        1 ஸ்பூன் மிளகு .1 ஸ்பூன் சீரகம்.வாழைப்பூ தேவையாளவு மிக்ஸியில் நைசாக அரைத்து தோசைமாவில் கலக்கவும். தோசை  மெலிதாக ஊற்றி  ஒரு பக்கமாய் மூடி சிவந்ததும் அதன் மேல் 1 டீஸ்பூன் நெய் தடவி எடுக்கவும். வாழைப்பூத்தோசை ரெடி.தேங்காய் சட்னிபுடன் சாப்பிட நல்லாயிருக்கும்.

திரட்டிப்பால்

200 கிராம் பயத்தம் பருப்பை. அடுப்பைப் பற்றவைத்து லேசாக நிறம் மாறும் போது வரை வறுத்து.  அதனுடன் 100 கிராம் அரிசியை தனியாக வறுத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை மட்டும் குக்கரில் 2 விசில் வைக்கவும். பச்சரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் மிக்ஸியில் நைஸாக பச்சரிசியை அரைக்கவும். அதனுடன் வெந்த பயத்தம் பருப்பை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கனமான வாணலியை அடுப்பில் வைத்து அரைத்து வைத்திருக்கும் இந்த கலவையை அதில்சேர்த்து. 500 கிராம் வெல்லம்( சுத்தம் செய்து) அதனுடன் சேர்க்கவும்.  நன்கு திரண்டு வரும் போது 200 கிராம் எண்ணெய் அதில் சேர்க்கவும். ஏலக்காய் 25கிராம் பவுடர் சேர்த்து. கைவிடாமல் கிளறி நெய் பிரிந்து வெளியில் வரும்போது இறக்கவும். திரட்டிப்பால் ரெடி .

எப்படி பீட்ரூட் பொரியல் செய்றது

பீட்ரூட் நைசாக நறுக்கிங்க  குக்கர் அடுப்பில் வைத்து எண்ணைய் 2 ஸ்பூன்  காய்ந்ததும் கடுகு. போடவும் .  தேங்காய் நாலு பல் மிளகாய்.1  சோம்பு சீரகம் தலா அரை டீஸ்பூன்  மிக்சியில் நல்லா  அரைத்து .அதுக்கப்புறம் குக்கரில் உள்ள பீட்ரூட்டன் கலந்து. கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு விசில்  வையுங்க பீட்ரூட் பொரியல் ரெடி.

முந்திரி பக்கோடா

 2கப் கடலை மாவு. 1 கப் அரிசி மாவு. 100 கிராம் முந்திரி பருப்பு. பச்சை மிளகாய் 3 (காரத்திற்கு தேவையான அளவு) இஞ்சி ஒரு துண்டு. உப்பு தேவையான அளவு. இஞ்சி. பச்சை மிளகாய் முந்திரி பருப்பு இவை அனைத்தையும்  பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு கடலை மாவு .உப்பு .அரிசி மாவுடன் சேர்த்து. பக்கோடா உதிர்த்து போடும் பதம் அளவிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும். வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும். இந்த பக்கோடா கலவையை எண்ணெயில் போட்டு எடுக்கவும் . நன்கு சிவந்து வெந்ததும்  தட்டில் வைத்தால் முந்திரி பக்கோடா ரெடி.

மிளகு .சீரகம் பொங்கல்

  குக்கரை அடுப்பில் வைத்து. 50 கிராம் பயத்தம் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும் .1 டம்ளர்  பச்சரிசியை எடுத்து கழுவி சுத்தம் செய்து விட்டு குக்கரில் சேர்க்கவும்.1 டம்ளர் அரிசிக்கு 5 டமளர் தண்ணீர் சேர்த்து வறுத்த பாசிப் பருப்புடன் சேர்ந்து குக்கரில் 5 விசில் வைக்கவும் பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு சீரகம் தலா ஒரு ஸ்பூன் வறுத்துப் பொடி செய்து போடலாம் இஞ்சி பச்சை மிளகாய் தேவையான அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு குக்கரில் உள்ள சாதத்தையும் தேவையான அளவு உப்பும் சேர்த்து  பிறகு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறி 50 கிராம் நெய்யில் முந்திரிப் பருப்பு வறுத்து பொங்கலில் சேர்க்கவும் நன்றாகக் கிளறி நெய் பிரிந்து வரும் பொழுது பொங்கலை இருக்கவும் பொங்கல் தயார் ரெடி

வெந்தய தோசை

 புழுங்கல் அரிசி 500கிராம்.  வெந்தயம் 50 கிராம். வெள்ளை உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன் இவை அனைத்தையும் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும் .பிறகு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் .பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து மூடி வைக்கவும். மாவு புளிப்பு பதம் வந்ததும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும். தோசை மாவை கலந்து நன்றாக கலந்துவிட்டு தோசை வார்க்கவும்.வெந்தயதோசை ரெடி. தக்காளிச் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

பனீர் ஃப்ரை

 வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெங்காயம்  2. தக்காளி 3. இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கி விட்டு. அரை டீஸ்பூன் மஞ்சள்தூள். ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் .ஒரு டீஸ்பூன் மல்லித்தூள். அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள். தேவையான அளவு உப்பு .சோம்புத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் .பிறகு பன்னீர் 200 கிராம் சின்ன சின்னதாக நறுக்கி அதனுடன் சேர்த்து  நன்றாக கலந்துவிட்டு 2 ஸ்பூன் நெய் விட்டு நன்றாக சுருண்டு வரும்போது. ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும். பன்னீர்  ஃப்ரை ரெடி. சப்பாத்தி .நாண்  இவைகளுடன சாப்பிட  நன்றாக இருக்கும்.

முட்டைக்கோஸ் மசாலா

  முட்டைக்கோஸ் 2 கப். வெங்காயம் 3 தக்காளி 3 வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெங்காயம். தக்காளியை பொன்னிறமாக வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் ஒரு கப் பொட்டுக்கடலை. பட்டைை.கிராம்பு.ஏலக்காய். பச்சை மிளகாய் ஒன்று சேர்த்து நைசாக அரைக்கவும்  குக்கரில் 3ஸ்பூன் எண்ணெய்(நெய்) சீரகம் அரை ஸ்பூன். நறுக்கிய முட்டைகோஸ் 2 கப் அதனுடன் சேர்க்கவும். பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் மல்லித்தூள் ஒரு ஸ்பூன். சீரகத்தூள் அரை ஸ்பூன். மஞ்சள் தூள். அரைத்து வைத்திருக்கும் மசாலா. தேவையான அளவு உப்பு சேர்த்து. உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைக்கவும். கோஸ்மசாலா ரெடி.