இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆரஞ்சு ரைஸ்

பாஸ்மதி ரைஸ் 1 கப் தண்ணீர் விட்டு அலசி. தண்ணீரை வடித்துவிட்டு 10 நிமிடம் வைக்கவும் குக்கரை அடுப்பில் வைத்து. 4 ஸ்பூன் நெய் சேர்த்து .காய்ந்ததும்.அதில் பட்டை. கிராம்பு பிரிஞ்சி இலை.ஏலக்காய் இவை அனைத்தையும் நெய்யில் வறுத்து விட்டு.பாஸ்மதி ரைஸ் அதில் சேர்த்து.லேசாக வறுத்து தேவையான அளவு உப்பு‌ 1 கப் தண்ணீர் விட்டுபாதி அளவு வெந்ததும்.அதில் ஆரஞ்ச் பழ ஜூஸ் எடுத்து ஒரு கப்.3 மூன்று ஸ்பூன் சீனி சேர்த்து.மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்.வெந்தது அடுப்பை அனைத்து விட்டு. நெய் இரண்டு ஸ்பூன் சேர்த்துநன்றாக கிளறி விட்டு.ஒரு தட்டில் எடுத்து பரிமாறவும்.ஆரஞ்சு ரைஸ் ரெடி

Kalaireal.xyz

  Kalaireal.xyz என்னுடைய  இந்த பிளாக் இந்தியன் சமையல் அதாவது இந்திய மக்களின் அனைத்துவிதமான (சைவசமையல்)உணவு பழக்கங்களும் சமைப்பது எப்படி என்று நேரடியாக சொல்வது போல் எழிதி  போஸ்ட் போடுகிறேன்.உங்களுக்கு தேவையான ஹெஸ்தியானசிறுதானிய ரெசிப்பிகள்.ஸ்வீட்.காரம் உங்களுக்கு எந்த மாதிரியான சமையல் தேவையோ அவற்றை உடனே  போஸ்ட் போடுவேன்.எல்லோரும் என்னுடைய பிளாக் வந்து பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.அதிக பயனும் கிடைக்கும். WWW.kalaireal.xyz.,

தால் மக்கானி

 உளுந்து நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய உளுந்துடன்.  குக்கரில் 5 விசில் வைத்து நன்றாக குழைய வேக வைக்கவும் .வாணலியை அடுப்பில் வைத்து .இரண்டு ஸ்பூன் வெண்ணெய் உருகியதும் வெங்காயம் நைசாக நறுக்கிய வெங்காயம் 3 .தக்காளி 4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன். மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் இவை அனைத்தையும். பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் . உளுந்து குழைய வேக வைத்த உளுந்தை இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் .ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை. சீரகம் தலா அரை டீஸ்பூன். தாளித்து கொதிக்கும் அந்த பருப்பில் சேருங்கள். மீதமிருக்கும் வெண்ணைய் அதில் சேர்க்கவும் ருசி நன்றாக இருக்கும். முடிந்தால் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம். தால் மக்கானி ரெடி. சப்பாத்தி பூரியுடன் சாப்பிடலாம்.

சுரைக்காய் மசாலா

 சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து  வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து  நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து  வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு பால் அரைக்கப். .கருவேப்பிலை சேர்த்து கெட்டியானதும் இறக்கவும்.சுரைக்காய் மசாலா ரெடி.

பன்னீர் பிரட் டோஸ்ட்

வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய்  விடுங்க. மிளகாய்த்தூள்  ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.  ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட்   டோஸ்ட்  செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி.

டிபன் சுண்டல்

 ஒரு கப் பச்சரிசி. அரை கப் பாசிப்பருப்பு இரண்டையும் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் லேசாக நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும் அடுப்பை பற்ற வைத்து குக்கரை அடுப்பில் வைத்து.. இரண்டு கரண்டி  எண்ணெய் விட்டு காய்ந்ததும் .அதில் கடுகு. உளுத்தம்பருப்பு. பச்சை மிளகாய்.5. வெங்காயம் 2.கடலைப்பருப்பு. இஞ்சி. கருவேப்பிலை. தேவையான அளவு உப்பு.( விருப்பப்பட்டால் காய்கறிகள் கேரட். உருளைக்கிழங்கு .பட்டாணி. உங்கள் விருப்பம் போல சேர்த்துக்கொள்ளலாம்.) சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிக்ஸியில் நாம் வறுத்து வைத்திருந்த பச்சரிசியை இரண்டு ஒன்றாக அடித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து. குக்கரில்  வதக்கி வைத்திருக்கும் கலவையுடன். ஒரு கப் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் வைத்து. 3 விசில் வைத்து இறக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மல்லித் தழை தூவி  ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.  சுண்டல் ரெடி. விருப்பப்பட்டால் தேங்காய் ஒரு மூடி துருவி. பரிமாறும்போது அதன் மேல் போட்டு. ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். இல்லை என்றால் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். ஊறுகாய். இவற்றுடன் சா

தயிர் டிக்கா

 தயிர் ஒரு கப் வெள்ளைத்துணியில்  நீர்வடிய முடிந்து வைக்கவும். பொட்டுக்கடலை ஒரு ஸ்பூன். காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். கரம் மசாலா அரை டீஸ்பூன். கான்பிளவர் ஒரு ஸ்பூன் . சர்க்கரை ஒரு டீஸ்பூன். இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக நைசாக தண்ணீர் விடாமல் பவுடராக அரைத்துக் கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கு கால் கிலோ. தோல் உரித்து சுத்தம் செய்து மசித்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் 2. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன். உப்பு.தண்ணீர் சிறிதளவு சேர்த்து இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்து.  சிறிய உருண்டைகளாக தட்டி. பின்னர் அடுப்பில் தவாவை வைத்து அதில் டிக்கா வைத்து. சுற்றிலும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சுட்டு எடுக்கவும் .ஒரு தட்டில் டிக்கா வைத்து அதன்மேல். தயிரில் இரண்டு ஸ்பூன் குங்குமப்பூ கலந்து. அதன்மேல் வைத்து ஓமம் சிறிது அதன் மேல் தூவி சாப்பிடலாம். தயிர் டிக்கா ரெடி.

தேங்காய் இல்லாத சட்னி

 பச்சை மிளகாய் 8. பெரியவெங்காயம் 4. கடலைபருப்பு 4 டேபிள் ஸ்பூன். வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும் .புளி  சிறிதளவு. உப்பு தேவைக்கு ஏற்ப இவை அனைத்தையும்  நைசாக அரைத்து. ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும் .பிறகு கடுகு கருவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும். தேங்காய் இல்லாத சட்னி ரெடி.

பச்சைமிளகாய் துவையல்

பச்சை மிளகாய் 10. உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன். எண்ணெயில் வதக்கி .உப்பு.பெருங்காயத்தூள்.சிறிது.1 பிடி மல்லி இலை.சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். பச்சைமிளகாய் துவையல் ரெடி.

எள்ளு துவையல்

 எள்ளு 4 ஸ்பூன் வாணலியில் எண்ணெய் விடாமல்  வறுத்து  காய்ந்த மிளகாய் 5  உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன் சேர்த்து மிக்ஸி ஜாரில் சிறிதளவு புளி உப்பு  தேவையான தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். . எள்ளு துவையல் ரெடி. (இதில் தண்ணீர் விடாமல் அரைத்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். எள்ளு சாதம் செய்யலாம் )

ரவா மிக்ஸ்

 ரவா 1கிலோ பச்சரிசி 500 கிராம். மைதா 500  கிராம். மிளகு  25 கிராம். சீரகம் 25 கிராம் இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் வைத்து  நைசாக அரைத்துக் கொள்ளவும். தேவையானபோது எடுத்து அரை மணி நேரத்திற்கு முன்பு சற்று நேரம்.  தண்ணீர் விட்டு ஊற வைத்து. வெங்காயம் .பச்சை மிளகாய். இஞ்சி .உப்பு சேர்த்து ரவா தோசை செய்யலாம் தக்காளி சட்னி தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்

அடை மிக்ஸ்

 கடலைப்பருப்பு  500 கிராம். துவரம் பருப்பு 250 கிராம். உளுத்தம் பருப்பு 150 கிராம். மிளகாய் 100 கிராம் இவை அனைத்தையும் நைசாக அரைத்து . டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். அடை ஊற்றுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு. தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். வெங்காயம். பச்சை மிளகாய். இஞ்சி நைஸாக அரிந்து போடவும். பெருங்காயத்தூள்.   கருவேப்பிலை. உப்பு சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும். தோசைக்கல்லைகாயவைத்து .கல் காய்ந்ததும் அதில் உங்கள் விருப்பம் போல் நைசாக அடை ஊற்றவும். இரண்டு புறமும் வெந்ததும்  ஒரு பிளேட்டில் வைத்து தேங்காய் சட்னி. அவியல். வெண்ணெய் வெல்லம் தொட்டு சாப்பிடும்போது நன்றாக இருக்கும் .அடை ரெடி .அடை மிக்ஸ் செய்து வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

பன்னீர் மசால் தோசை

வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம். பச்சைமிளகாயை போடுங்க நன்றாக வதங்கியதும் கொஞ்சம் உப்பு. மிளகாய்த்தூள். மல்லித்தூள். சீரகத்தூள் கரம் மசாலா தல அரை ஸ்பூன். 100 கிராம் அதில் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் மூன்று ஸ்பூன் நெய் விடவும். ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.தோசை மாவு ஒரு கப்.தோசைக்கல்லை அடுப்பில் வைத்து. காய்ந்ததும் நைஸாக மெல்லியதாக தோசை ஊற்றி அதில் இந்த கிரேவியை மேல் வைத்து. ஒரு பக்கமாக மூடி எடுக்கவும் .பன்னீர் மசால் தோசை ரெடி.(இதேபோல்தான் பன்னீருக்கு பதில் கேரட் சேர்த்தால் 🥕 கேரட்தோசை ரெடி) தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

மஸ்ரூம் மசாலா

மஸ்ரூம் ஒரு பாக்கெட் சுத்தம் பண்ணி எடுத்து வைங்க. பிரஷர் பேன் அடுப்பில் வைத்து எண்ணெய் ஒரு குழிகரண்டி விட்டு பட்டை. கிராம்பு. .இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன். சேர்த்து நல்லா வதக்குங்கள். வெங்காயம் 2.தக்காளி 2 நைசாக பொடி கட் செய்து. அதில் சேர்த்து நல்லா வதக்குங்க.ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள். அரை டீஸ்பூன் மல்லித்தூள்.கரம் மசாலாத்தூள் கால் டீஸ்பூன். மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்.உப்பு சேர்த்து நல்லா வதக்குங்க. இப்ப சுத்தம் பண்ணி வச்சிருக்கும் மஸ்ரூம் சேருங்க கசகசா அரை டீஸ்பூன் .தேங்காய் 1ஸ்பூன் மிக்ஸி ஜாரில் நைஸாக அரைத்து கிரேவியில் விடவும் எண்ணெய் பிரிந்து வரும்போது இருக்குங்க. மஸ்ரூம் மசாலா ரெடி