தயிர் டிக்கா

 தயிர் ஒரு கப் வெள்ளைத்துணியில்  நீர்வடிய முடிந்து வைக்கவும். பொட்டுக்கடலை ஒரு ஸ்பூன். காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். கரம் மசாலா அரை டீஸ்பூன். கான்பிளவர் ஒரு ஸ்பூன் . சர்க்கரை ஒரு டீஸ்பூன். இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக நைசாக தண்ணீர் விடாமல் பவுடராக அரைத்துக் கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கு கால் கிலோ. தோல் உரித்து சுத்தம் செய்து மசித்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் 2. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன். உப்பு.தண்ணீர் சிறிதளவு சேர்த்து இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்து.  சிறிய உருண்டைகளாக தட்டி. பின்னர் அடுப்பில் தவாவை வைத்து அதில் டிக்கா வைத்து. சுற்றிலும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சுட்டு எடுக்கவும் .ஒரு தட்டில் டிக்கா வைத்து அதன்மேல். தயிரில் இரண்டு ஸ்பூன் குங்குமப்பூ கலந்து. அதன்மேல் வைத்து ஓமம் சிறிது அதன் மேல் தூவி சாப்பிடலாம். தயிர் டிக்கா ரெடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா