இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஈசி சாம்பார் பத்து நிமிடத்தில் ரெடி

 குக்கரை அடுப்பில் வையுங்க. எண்ணெய் 4 ஸ்பூன் விடுங்க. காய்ந்ததும் கடுகு. சீரகம். வெங்காயம் நறுக்கியது 2. எல்லாத்தையும் வதக்குங்க பிறகு மிக்ஸி ஜாரில் 4 .தக்காளி.  கத்தரிக்காய் 1  லேசாக அடிங்க. பின் வதங்கிய வெங்காயத்துடன் கலந்து. மிளகாய் தூள் 2 ஸ்பூன். மல்லித் தூள் 1 ஸ்பூன். தேவையானளவு உப்பு. தண்ணீர் .தோசை மாவு 2 ஸ்பூன் (இல்லையென்றால்) கடலை மாவு 1 ஸ்பூன் அதில்   கரைத்து விடுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி விடுங்க. இந்த ஈசி சாம்பார் ரவா தோசை. கோதுமை தோசை. இட்லி. எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். பத்தே நிமிடத்தில் ஈசி சாம்பார் ரெடி.

பயத்தம் பருப்பு சாம்பார்

பயத்தம் பருப்பு ஒரு கப். குக்கரில் வேகவைத்து எடுங்க. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் 2 ஸ்பூன் விட்டு. கடுகு .உளுத்தம் பருப்பு. பச்சை மிளகாய் 3.  வெங்காயம் 2 தக்காளி 4 நைசாக நறுக்கி வதக்கவும் .பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் .அரை ஸ்பூன் மஞ்சள்தூள்.சோம்பு அரை ஸ்பூன். தேங்காய் துருவி நான்கு ஸ்பூன் பொட்டுக்கடலை 3 ஸ்பூன்  இது எல்லாத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் நைஸாக அரைத்து  வதக்கிய வெங்காயம் .தக்காளி. பருப்புடன் சேர்த்து. 15 நிமிஷம் கொதிக்க விடுங்க. பிறகு பயத்தம் பருப்பு சாம்பார் ரெடி.  கருவேப்பில்லை. கொத்தமல்லி தூவி இறக்கி விடுங்க. இட்லி. தோசை. சப்பாத்தி. ரவா தோசை. கோதுமை தோசை எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம் .

இனிப்பு சட்னி செய்யலாம்

 பச்சை மிளகாய் 3. புளி சிறிதளவு .உப்பு தேவையான அளவு  பேரிச்சை 25 கிராம். (அரைக்க முடிவிவ்லை என்றால் லயன்டேட்ஸ் சிரப் உபயோகிக்கலாம் ). வெல்லம் இனிப்புக்கு தேவையான அளவு.  முந்திரி  10 இவை அனைத்தையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் ஒருவாரம் வரை  கெட்டுப் போகாமல் இருக்கும் ப்ரிஜ்ல் வைத்து உபயோகம் பண்ணுங்க.

தால் பூரண்எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

 தால் பூரண் சப்பாத்தி சூப்பராக இருக்கும்.  எல்லாருக்கும் பிடிக்கும். எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க. கோதுமை மாவு ஒரு கப். மைதா மாவு ஒரு கப். உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு  போல் பிசைந்து வைக்கவும். கடலைப்பருப்பு ஒரு கப். குக்கரில் ஒரு விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் ஜாரின் கால் கப் சீனி. 10 ஏலக்காய் சேர்த்து  அரைத்துக்கொள்ளவும இவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் .பிசைந்து வைத்த சப்பாத்தி மாவில் ஒரு உருண்டை எடுத்து சப்பாத்திகளாக தேய்த்து. அதன் நடுவில் இந்த பருப்பு உருண்டை வைக்கவும். அதை மூடி கோதுமை மாவை தொட்டு மறுபடியும் சப்பாத்திகளாக தேய்க்கவும். அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து. சப்பாத்தியை போட்டு எடுக்கவும்.அதன் மேல் நெய் தடவி அடுக்கவும். தால் பூரண் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள ஜாம். இனிப்புச் சட்னி .உங்களுக்கு விருப்பப்பட்ட குருமா சேர்த்து சாப்பிடலாம் .அடுத்து இனிப்புச் சட்னி எப்படி பண்றதுனு தெரிஞ்சிக்கலாம்.

மேதி டேப்ளா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கலாம்

 வெந்தயக்கீரை ஒரு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தது மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்  அரை ஸ்பூன்  கோதுமை மாவு 250 கிராம் கடலைமாவு 2 டேபிள்ஸ்பூன் எல்லாவற்றையும் லேசாக சூடாக்கவும் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியதும் அதிலும் அரைக் கப் தயிர் நாம் அறிந்து வைத்திருக்கும் வெந்தியக்கீரை தேவையான அளவு சீனி 2 ஸ்பூன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும் 15 நிமிடம் கழித்து சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக செய்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும். தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு  அதன் மேல் நெய் தடவி பரிமாறலாம் சைடிஷ் வந்து நிறைய நமது பிளாக்கில் நிறைய போஸ்ட் போட்டிருக்கேன்.பன்னீர் பட்டர் மசாலா. கோபி மசாலா.  முட்டைகோஸ் மசாலா.நிறைய.... போட்டு இருக்கேன் நிறைய நிறைய சொல்லிட்டே போகலாம்.  எது உங்களுக்கு பிடிக்குமோ  நீங்க டைப் பண்ணினால்வரும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்க பண்ணிக்கலாம் இப்போ மேதி டேபிளா ரெடி. 

தக்காளி தால்

 மைசூர் தால் ஒரு கப். குக்கர்ல நல்லா மலர  வேக வைக்கவும் .வாணலியில் எண்ணைய் விட்டு.காய்ந்ததும்  கடுகு. சீரகம் .கறிவேப்பிலை. இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை டீஸ்பூன். பச்சை மிளகாய் 3  போடுங்க மிளகாய்த்தூள்1  டேபிள்ஸ்பூன். தக்காளி 5 கொஞ்சம் பெரிய துண்டுகளாக கட் செய்து  வதக்கி பருப்புடன் சேருங்க. இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு. அரை டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வையுங்க. சூப்பரான  தக்காளி தால் ரெடி .தோசை. இட்லி. சப்பாத்தி. பூரி எல்லாத்துக்குமே சூப்பரான காம்பினேஷன் இந்த  தக்காளிதால் .

பாரம்பரிய மண் பானை சமையல் இருந்து opos ஆரோக்கியமான எப்படி?

பாரம்பரிய மண் பானை சமையலில் இருந்து Opos எப்படி ஆரோக்கியமானது? இதுபோல நிறைய பேர் கேள்வி கேட்டுட்டு இருக்காங்க ரொம்ப ஈசியா சொல்லனும்னா .நம்ம முன்னாடி எல்லாம்  ஒரு பெரிய குக்கரில் .உள்ளே வச்சு எடுக்க .4 அடிக்கு ஒரு கேரியர் மாதிரி பாத்திரம் அதையும் சேர்த்து தான் கொடுப்பாங்க. இப்ப மண்பாண்டங்களில் செய்யக்கூடிய குக்கர் கூட கிடைக்கிறது  அதில் எப்படி சமையல் செய்யலாம்  தெரியுமா? நம்மளும் தெரிஞ்சுக்கலாம் வாங்க . இப்ப சாம்பார் காய்கறிகளை ரெடி செய்து முதல் அடுக்கில் வைத்துவிட்டு ஒரு ஸ்பூன் சாம்பார்த்தூள்  வெங்காயம். பச்சை மிளகாய். துவரம் பருப்பு .உப்பு .புளித் தண்ணீர். ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு .ஒரு அடுக்கு ரெடி. இரண்டாவது அடுக்கில் பொரியல். உப்பு .காரம் சேர்த்து .அரை டம்ளர் தண்ணீர் விடவும் இரண்டாவது அடுக்கு ரெடி .மூன்றாவது அடிக்கு கூட்டு செய்வதற்கு தேவையான காய்கறிகளை நறுக்கி அதில் உப்பு. காரப்பொடி .பருப்பு தேங்காய் பேஸ்ட் .சிறிதளவு தண்ணீர் விட்டு மூன்றாவது அடிக்கு ரெடி. நாலாவதுஅடுக்கில்  தேவையான காய்கறிகள் உருளைக்கிழங்கு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகள் .அதுல கொஞ்சம் காரம். உப்பு. மிளகாய் தூள் .ஒ

டபுள் பீன்ஸ் மசாலா

 டபுள் பீன்ஸ் 1கப் பட்டாணி 1 கப் உப்பு போட்டு வேக வையுங்கள். குக்கரை அடுப்பில் வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணைய் விடுங்க.  சீரகம். கருவேப்பிலை. கடுகு .2   வெங்காயம். தக்காளி-2 நைஸாக அரிந்து போடுங்க . வேகவைத்து இருக்கக்கூடிய டபுள் பீன்ஸ் .பட்டாணி இரண்டையும் அதில் போடுங்க. மிக்ஸி ஜாரில் இஞ்சி. பூண்டு.  மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். மல்லித் தூள் ஒரு ஸ்பூன். முந்திரிபருப்பு 10 நைஸாக அரைத்து அதில் சேர்த்திடுங்க. பிறகு கொஞ்சம் உப்பு .தண்ணீர் சேர்த்து .மிதமான தீயில் நல்லா சுருள வதக்குங்கள்  எண்ணைய் பிரிந்து வரும்போது இறக்குங்க.டபுள் பீன்ஸ் மசாலா ரெடி நாண். .சப்பாத்தி. ஃப்ரைட் ரைஸ் .பூரி. எல்லாத்துக்குமே சேர்த்து சாப்பிடலாம்

சமையல் எண்ணைய்

 நிறைய பேர் கேட்கிற கேள்வி என்னன்னா?சமையலுக்கு ரீஃபைண்ட் ஆயில் யூஸ் பண்ணலாமா கேக்குறாங்க? செக்கு எண்ணெய் வாங்கி  அதை நம்ம பயன்படுத்துவதுதான் நல்லது சொல்லுவேன். அது தரமானதாக இருக்கும் . சிலருக்கு அது பிடிக்காது. அதனால ஒரே மாதிரியாக எண்ணைய் வாங்காமல்  வேற வேற பிராண்டட் பார்த்து வாங்கி உபயோகப்படுத்துங்கள்.
 கோதுமை ரவையை .ஒரு கப் எடுத்து லேசாக வறுத்து கொள்ளவும்.குக்கரை அடுப்பில் வைக்கவும். (ரொம்ப நாளாக  சொல்லணும்னு தோணுச்சு. இப்ப நான் அதிகம் பயன்படுத்துவது மண் பாத்திரங்கள்தான்.  குக்கர்.இட்லிபாணை. பிரஷர் பன். டம்ளர் நிறைய பாத்திரங்கள் கிடைக்கிறது. மைக்ரோ ஓவனில் வைத்து சமைக்கிறதுக்கு வசதியா இருக்கு. சுவையும் மாறாமல் இருக்கும். சரி நாம்ம இப்ப  சமையலுக்கு வருவோம்.) குக்கரை அடுப்பில் வையுங்கள் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு. கடலைப்பருப்பு. இஞ்சி. காய்ந்த மிளகாய்  10 . வெங்காயம் ஒரு கப் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.  பிறகு கேரட் .உருளைக்கிழங்கு. பட்டாணி சேர்த்து வதக்கி. பிறகு கோதுமை ரவையை அதில் சேர்த்து நன்றாக வதக்குங்கள். ஒருகப் ரவைக்கு இரண்டரை கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து.குக்கர் மூடியை எடுத்து  மூடவும். 3 விசில் வைத்து இறக்கவும். பத்து நிமிடம் கழித்து. மூடியைத் திறந்து விட்டு அதில் .கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி விட்டு இருக்குங்க. கோதுமை ரவை உப்புமா ரெடி. தேங்காய் சட்னி .தக்காளி சட்னி வைத்து சாப்பிடலாம்.

ரவா கஞ்சி

 ரவா 1 கப்.வாணலியில் லேசாக வருக்கவும். குக்கர்ல கொஞ்சம் எண்ணைய் போடுங்க. அதில் கடுகு .காஞ்ச மிளகாய். இஞ்சி. கடலைப்பருப்பு போடுங்க. 4 டம்ளர் தண்ணி வையுங்க. கொஞ்சம் தண்ணீர் கொதி வந்ததும்.  ரவாவை போட்டு கைவிடாமல் கிண்டவும்.  4 முந்திரி  பருப்பை நைசா அரைத்து கஞ்சியில் கலந்து விடுங்கள். லேசா ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கி வையுங்க.சூப்பரான ரவா கஞ்சி ரெடி. நமக்கு காய்ச்சல் அடிக்கும் போது .வாய்க்கு எது சாப்பிட்டாலும் நல்லா இருக்காது அந்த சமயத்துல நல்லா சாப்பிட சொல்லி சொன்னா பிடிக்காது. அந்த நேரத்துல இந்த ரவா கஞ்சி  ஈசியா சீக்கிரமாக வச்சு சாப்பிடலாம்.  கொஞ்சம் காரமாஇருக்கும். இந்தக் கஞ்சி குடிக்கும் போது உடம்பு கொஞ்சம் ஹெல்தியாய் இருக்கும்.

கில்லு அடை

 புழுங்கல் அரிசி2கப்.பச்சரிசி1கப். இரண்டையும் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் .அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து  அடை போல கனமாக  தோசைகளாக வார்க்கவும் .சிவக்க விடாமல் வெண்மையாக  சிம்மில் வைத்து ஊத்த வேண்டும். ஆறியவடன் அந்த தோசையை சின்ன சின்னதாக கில்லி ஒரு டப்பாவில் வைக்கவும். பிறகு 2 கப் துவரம்பருப்பு குக்கரில் அரை பதத்திற்கு வேக வைக்கவும். ஒரு வாணலியில் சீரகம் 2 ஸ்பூன் எண்ணெய் விடாமல் வறுத்து. மிக்ஸியில் ஜாரில் ஒன்றிரண்டாக அரைக்கவும். 2 கப் தேங்காய் நைசாக துருவி எடுத்துக் கொள்ளவும். குக்கரில் நாம் வேக வைத்த துவரம்பருப்பை.  ஜாரில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு. கடுகு .சீரகம் .காய்ந்த மிளகாய் 10.கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும் பின் கில்லி வைத்த அடைபை சேர்த்து நன்றாக கிளறவும். அதில் துவரம் பருப்பு. தேங்காய் துருவல். சீரகப்பொடி அதில் சேர்க்கவும். தேங்காய் எண்ணெய் தேவையான அளவு சேர்த்து .எல்லா புறமும் நன்றாக கிளறி விட்டு மிருதுவாக வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.கில்லு அடை ரெடி. இரண்டு நா

கொஸ்து செய்யலாம் வாங்க

 மிளகாய் 6. கடலைப்பருப்பு 1 டீஸ்பூன். மல்லி 2 டீஸ்பூன். வறுத்து மிக்ஸியில் நைஸாக பொடி பண்ணி வச்சிக்கோங்க. வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு. உளுத்தம்பருப்பு. காய்ந்த மிளகாய் சேர்த்து. தக்காளி-2 கத்தரிக்காய் 3 நைசாக  அதில் நறுக்கி சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் வெந்ததும் அந்த கத்தரிக்காயை நைசாக மசித்து விடவும். புளித்தண்ணீர் ஒரு கப் அதில் சேருங்க . பொடி செய்து வைத்திருக்கும்  பவுடர். கொஞ்சம் உப்பு சேர்க்கவும் 15 நிமிடம் கொதிக்க விடுங்க. க கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.கொஸ்து ரெடி. இட்லி .தோசை. உப்புமா. பொங்கல் இது எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம்.

காலிஃப்ளவர் மசாலா

 காலிஃப்ளவரை சுத்தம் செப்து எடுத்து வையுங்க. உருளைக்கிழங்கு தோலை சீவி சின்ன சின்னதாக நறுக்கி வையுங்க  அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து நாலு ஸ்பூன்  எண்ணைய் விடுங்க காய்ததும்  பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து.  வெங்காயம் 2 தக்காளி 2 முந்திரிபருப்பு இவற்றை  மிக்சியில் அரைத்து அதில் கலந்து பின் காலிபிளவர் .உருளைக்கிழங்கு. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். கரம் மசாலாத்தூள் . அதில் கலந்து கொஞ்சம் உப்பு தேவையான அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு .குக்கரில் 2 விசில் வைத்து. 10 நிமிடம் கழித்து. குக்கரின் மூடியைத் திறந்து.  உருளைக்கிழங்கு நன்றாக மசித்து விடவும் . பின் எண்ணைய் பிரியும்போது ஒரு பாத்திரத்தில் மாற்றி. அதன் மேலே இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூப்பரான கமகம காலிஃப்ளவர் மசாலா ரெடி பிரியாணி.சப்பாத்தி .நாண்.பூரி இது எல்லாத்துக்கும் சேர்த்து  சாப்பிடலாம் .

கோதுமை மாவில் கொத்து பரோட்டா செய்யலாம் வாங்க

 கோதுமை மாவு தேவையான அளவு. கோதுமை மாவை சப்பாத்திகளாக செய்து வையுங்க.பிறகு பின்ஸ்.கேரட். முட்டைகோஸ். குடைமிளகாய். வெங்காயம் இவை அனைத்தையும்.  பொடியாக நறுக்கவும்.     வாணலியை அடுப்பில் வைத்து. அதில் பட்டை. சோம்பு .கரம் மசாலா. பிளைன் மிளகாய்த்தூள். தேவையான அளவு இவை அனைத்தையும் வதக்கிக் கொள்ளவும். பின்   வெங்காயம்.  மிளகாய்.பிறகு எல்லா காய்கறிகளையும்  போட்டு  வதக்கி. அதில்  டொமேட்டோ சாஸ் இரண்டு ஸ்பூன். சில்லி சாஸ் ஒரு ஸ்பூன். உப்பு இவை அனைத்தையும் வதக்கவும். நாம் செய்து வைத்திருக்கும் சப்பாத்திகளை  நறுக்கி . காய்கறி கலவையுடன் சேர்த்து கலந்து விடவும் .அடுப்பை நிறுத்திவிட்டு.இரண்டு தோசை திருப்பி வைத்து 20 நிமிடம்  கொத்த வேண்டும்.  பிறகு அடுப்பில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும். கொத்து பரோட்டா ரெடி. தயிர்  பச்சடியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

சில்லி பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க

 மைதா மாவு ஒரு கப். நாலு ஸ்பூன் ரவா பவுடர். அரை டீஸ்பூன் ஈஸ்ட் 100 கிராம் தண்ணீரில்  ஊற வையுங்க. கரைந்ததும். அந்த ஈஸ்ட் எடுத்து மைதா மாவுடன் சேர்த்து. உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து .மைதா மாவை பரோட்டா போடும் பதத்திற்கு பிசைந்து.  5 நிமிஷம் ஊற வையுங்க. பிறகு ஒரு எலுமிச்சை அளவு உருண்டைகளாக மாவை எடுத்து பரோட்டா செய்து வையுங்க .லேயர் லேயராக வரலைன்னா நீங்க கவலைப்பட வேண்டாம். ஓரளவுக்கு சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை .அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் விடுங்க நம்ம செய்து வைத்திருக்க பரோட்டாவை. அந்த எண்ணெய் காய்ந்ததும் அதில் பரோட்டாவை போட்டு  அடிக்கி வச்சிருங்க. ஒரு வாணலியில் 5 ஸ்பூன் எண்ணைய் விடுங்க அதுல சோம்பு பட்டை 1 குடை மிளகாயை கீரி போடுங்க.மூன்று பெரிய வெங்காயத்தை நைசாக நறுக்கிப் போடுங்கள் 2 ஸ்பூன் சில்லி சாஸ் .2 ஸ்பூன் டொமேட்டோ சாஸ். அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள். கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் .சிறிதளவு உப்பு சேர்த்து நல்லா வதக்குங்க. பிறகு பரோட்டாவை எடுத்து கையால் உடைச்சு மசாலாவுடன் கலந்து 10 நிமிடம் மூடி வையுங்கள்.பத்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் கமகம .சில்லி பரோட்டா ரெடி.

ரசகுல்லா

ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.

அவல் பாயாசம்

அவல் ஒரு கப் எடுத்து லேசாக வறுக்கவும். ஒன்னு ரெண்டா கையாலேயே உடைத்து விட்டுங்க.குக்கர்ல அவல் போட்டு. ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் வையுங்கள். பிறகு அதில் 2 கப் வெல்லம் சேருங்கள். ஒரு சின்ன வாணலியை அடுப்பில் வைத்து அதில் நாலு ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும். முந்திரிப்பருப்பு. திராட்சை வறுத்து அதில் போடுங்க.ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன்.ஒரு துளி உப்பு.அரை டம்ளர் பால்சேர்க்கவும்.இவை அனைத்தையும் குக்கரில் வேக வைத்திருக்கும் அவல் பயத்துல மிக்ஸ் பண்ணுங்க.கைவிடாமல் கிளறுங்கள் கொஞ்சம் கெட்டியானதும்.ஒரு டம்ளர் எடுத்து பரிமாறவும்.அவல் பாயசம் ரெடி

வரகரிசி உப்புமா

குக்கரை அடுப்பில் வைங்க 5 ஸ்பூன் எண்ணைய் விடுங்க சூடானதும்.கடுகு அரை டீஸ்பூன். கடலைப்பருப்பு அரை டீஸ்பூன். பச்சை மிளகாய் 5 கீறிப் போட்டு ங்கு 5 வெங்காயம். பீன்ஸ்.கேரட். உருளைக்கிழங்கு. உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் ஒரு கப் நைஸாக அரிந்து அதில் சேர்த்து வதக்கவும். பிறகு வரகரிசி சேர்த்து வதக்குங்கள்.1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் விட்டு.தேவையானஅளவு உப்பு. கருவேப்பிலை சேர்த்து. குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும். அடுப்பை அனைத்துவிடடு. பிறகு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து நன்றாக கிளறி.ஒரு தட்டில் எடுத்து பரிமாறவும். வரகரிசி உப்புமா ரெடி. தேங்காய்சட்னி.சாம்பார் .தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம்.