தால் பூரண்எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

 தால் பூரண் சப்பாத்தி சூப்பராக இருக்கும்.  எல்லாருக்கும் பிடிக்கும். எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க. கோதுமை மாவு ஒரு கப். மைதா மாவு ஒரு கப். உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு  போல் பிசைந்து வைக்கவும். கடலைப்பருப்பு ஒரு கப். குக்கரில் ஒரு விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் ஜாரின் கால் கப் சீனி. 10 ஏலக்காய் சேர்த்து  அரைத்துக்கொள்ளவும இவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் .பிசைந்து வைத்த சப்பாத்தி மாவில் ஒரு உருண்டை எடுத்து சப்பாத்திகளாக தேய்த்து. அதன் நடுவில் இந்த பருப்பு உருண்டை வைக்கவும். அதை மூடி கோதுமை மாவை தொட்டு மறுபடியும் சப்பாத்திகளாக தேய்க்கவும். அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து. சப்பாத்தியை போட்டு எடுக்கவும்.அதன் மேல் நெய் தடவி அடுக்கவும். தால் பூரண் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள ஜாம். இனிப்புச் சட்னி .உங்களுக்கு விருப்பப்பட்ட குருமா சேர்த்து சாப்பிடலாம் .அடுத்து இனிப்புச் சட்னி எப்படி பண்றதுனு தெரிஞ்சிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா