மோதகம்.... பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் ஸ்வீட் எப்படி பண்றதுனு பார்க்கலாம் வாங்க

4 ஸ்பூன் கடலை பருப்பு. குக்கரில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு .அரை பதத்துக்கு வேக விடுங்க. வெயிட் போடாமல் ஒரு அஞ்சு நிமிஷம் வெச்சாலே போதும் வெந்த பருப்பை ஆறியதும் மிக்சியில் நைசாக அடிச்சுருங்க. தேங்காய் 2 கப். வெல்லம் 2 கப். எல்லாம் சுத்தம் பண்ணி எடுத்து வச்சுக்குங்க. அடுப்பில் அடி கனமாக உள்ள கடாய்  வையுங்க. வெச்சிட்டு வெள்ளம் கொஞ்சம் தண்ணி விட்டு கரைந்ததும். தேங்காய்  சேருங்க .கொஞ்சம் நல்ல திக்கானதும் அடுப்பை நிறுத்திட்டு இந்த கடலை பருப்பு சேர்த்து நல்லா கிண்டுங்க‌ அதுக்கப்புறமா அடுப்பு பத்த வைச்சு.நல்லா திரண்டு வரும் போது.அதில்10கிராம் ஏலக்காய்த் தூள்.2 ஸ்பூன் நெய் விடுங்க.சுருண்டு சீக்கிரமேபூரணம் ரெடியாயிடும் பூரணம்.ரெடியானதும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வச்சிருங்க.பிறகு நம்ம மாவு ரெடி பண்ணனும் ஒரு பாத்திரத்தில் ஒன்னேகால் டாம்ளருக்கு தண்ணீர் ஊற்றி நல்லா கொதி வரும்போது. அரை உப்பு போடுங்க.1 ஸ்பூன் நல்லெண்ணைய் விடுங்க.அடுப்பைஆஃப் பண்ணிட்டு‌‌.ஒரு டம்ளர் பச்சரிசி மாவை அதில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து.கட்டி இல்லாமல் நன்கு கிளறிவிட்டு.அடுப்பில் வைத்து கொஞ்சம் நேரம் வேகவையுங்க.வெந்ததும் இறக்கி வச்சிட்டு.மோதகம் பண்றதுக்கு அந்த மாவு வந்து கிண்ணம் போல் செய்யுங்க. கிண்ணம் போல வர்றத்துக்கு‌ மாவு பதமாக இருக்கா என்று பார்த்து ரெடி பண்ணி வச்சிக்குங்க. அப்படி இல்லைனா.நல்லா அந்த மாவை கையால் அழுத்தி பிசைங்க.அப்பதான்வெடிப்புவிடாமல்.அழகாக செய்ய வரும் .அதாவது உள்ளே பூரணம் வைத்து மூடுவதற்கு நன்றாக வரும்.உங்களுக்கு பிடித்தமான வடிவத்தில் மோதகம் செய்து வச்சுக்கங்க ‌ இட்லி பானையில் இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு.பின் இட்லி தட்டில் ஒரு துணி போட்டு நம்ம செஞ்சு வெச்சிருக்கற மோதகம்.பிள்ளையார் கொழுக்கட்டைன்னு சொல்வாங்க அதை எடுத்து அதில் வைத்து. அடுப்பை பற்ற வையுங்க அஞ்சு நிமிஷம் வெந்ததும் எடுத்து கீழே வச்சிட்டு. கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு பாத்திரத்தில் எடுத்து வையுங்க. விநாயகருக்கு பிடித்த ஸ்வீட் ரெடி

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா