பூண்டு வெங்காயம் அரைத்து விட்ட கார குழம்பு

 கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விடுங்க.காய்ந்ததும் மிளகு சீரகம் தலா 2 ஸ்பூன். உளுத்தம்பருப்பு.துவரம் பருப்புதலா1டீஸ்பூன்.கறிவேப்பிலை ஒரு சிறிதளவு வெந்தயம் அரை டீஸ்பூன் மிளகாய் 5. இவை அனைத்தையும் நன்றாக வறுத்து ஆற வைத்து.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நைசாக தண்ணீர் விடாமல் பவுடராக அரைக்கவும். சிறிதளவு புளி ஊற வைக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் 3 கரண்டி விட்டு எண்ணெய் காய்ந்ததும். கடுகு.வெந்தயம். சீரகம்தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை சேர்த்து வதக்கவும அதனுடன் வெங்காயம் உரித்து சுத்தம் செய்து ஒரு கப்.பூண்டு 2 கப். தக்காளி2 நன்றாக கழுவி  நைஸாக அரிந்து. அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து ஒரு கப் எடுத்து அதில் சேர்த்து. சிறிதளவு உப்பு. வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்றாக 15 நிமிடம் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சூப்பரான வெங்காயம் பூண்டு அரைத்துவிட்ட குழம்பு ரெடி. இட்லி. தோசை. சாதம். கோதுமை தோசை. ரவா தோசை. கல் தோசை இவை அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா