மஸ்ரூம் மசாலா

 மஸ்ரூம் 250 கிராம் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். (ஒரு அகலமான பாத்திரத்தில் 3.தண்ணீர் விட்டு அதில் 1ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு மஸ்ரூம் ஐ அலசிவிட்டு கொதிக்கும் வெந்நீரில் போட்டு10 நிமிடம் மூடி வைக்கவும்.பிறகு அதிலுள்ள கருப்பாக இருக்கும் பகுதிகளை  நீக்கிவிட்டு சுத்தம் செய்து தட்டில் வைத்துக் கொள்ளவும்)அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள். அரை டீஸ்பூன் மிளகுத்தூள்.கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும். பட்டை .கிராம்பு. ஏலக்காய் பொடி செய்து.அதில் தூவவும் வாசனை நன்கு வரும் போது‌ வெங்காயம் 4 சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி 2 பொடியாக நறுக்கி நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன். மல்லித் தூள் அரை டீஸ்பூன். பிறகு நாம் கலந்து வைத்திருக்கும் மஸ்ரூம்  இதனுடன் சேர்த்து. சிறிதளவு உப்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை ஆப் நிறுத்தவும்.பின்புஒரு பாத்திரத்தில் மாற்றவும். அதன்மேல் மல்லித்தழை தூவவும். அருமையான மஸ்ரூம் மசாலா ரெடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா