கேசரி போலி

ஒரு கப் ரவையை வாணலியில் நெய் ஒரு ஸ்பூன் போட்டு வறுக்கவும். ஒரு கப்புக்கு 2 கப் தண்ணீர் விடுங்கள்.தண்ணீர் கொதித்ததும் அதில் கொஞ்சம் கேசரி பவுடர் போடுங்க. நல்லா கொதிக்கும்போது ரவையை அதில் கலந்து விடவும். அடுப்பு தீயை குறைத்து விடுங்கள். அதன்பிறகு .1கப் ரவைக்கு 2சீனீகப் சேர்த்து .அடுப்பில் வைத்து கட்டி இல்லாமல் சிறிதுநேரம் வேகவைக்கவும்.  4 ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய் பவுடர் சேர்த்து. நெய் பிரிந்து வரும்பொழுது கேசரியை இறக்கிடுங்க.பின்னர் மைதா மாவு அதில் கொஞ்சம் தண்ணிர் விட்டு துளி உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும் 15 நிமிஷம் ஊறவும் பின்னர் எலுமிச்சை அளவு மைதா மாவை உருட்டி சப்பாத்திக் கல்லில் வட்டமாக தேய்த்து அதில் கேசரியை ஒரு ஸ்பூன் எடுத்து வைக்கவும் நல்லா மூடிட்டு.மறுபடியும் மாவு தொட்டு ரவுண்ட் சப்பாத்தி மாதிரி செய்து.பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்த்ததும். இந்த கேசரி போலியை எடுத்து தோசைக்கல்லில் போட்டு. இரண்டு பக்கமும் நெய் விட்டு ஒரு தட்டில் எடுத்து அடுக்கி வைக்கவும். கேசரி போலி ரெடி.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா