சாப்பாடு ரெடி. சாதம் .முருங்கைக்காய் சாம்பார்.கீரை கூட்டு. உருளைக்கிழங்கு காரம் தக்காளிரசம். சூப்பரான மதிய சாப்பாடு ரெடி எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்

 முருங்காய் சாம்பார் . பருப்பு 1 கப் வேகவைத்து தனியாக எடுத்து வையுங்க‌ (துவரம்பருப்பு நன்றாக வேகவைத்து குழைவாக இருக்க வேண்டும்)முருங்காய்யை சிறிய சிறியதாய் நறுக்கி வைத்துக்கவும். வெங்காயம்1தக்காளி 2 சிறிதாக வெட்டி வைத்துக்கவும்.புளி தண்ணீர் சிறிது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் 3 ஸ்பூன் விட்டு காய்ந்ததும் கடுகு. உபருப்பு சிறிதளவு கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் ஒன்று நறுக்கி வெங்காயம் தக்காளி இவை அனைத்தும் சேர்த்து எண்ணையில் வதக்கி.புளி தண்ணீர் சேர்த்து உப்பு.சாம்பார் மிளகாய்தூள் (இவைகளை உங்களுக்கு தேவையான அளவு)காரம் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.பிறகு நாம் வேக வைத்த பருப்பு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வையுங்க. முருங்க்காய் வெந்ததும் இறக்குங்க பிறகு மல்லித்தழை பெருங்காயத்தூள் சேர்த்திடுங்க முருங்கக்காய் சாம்பார் ரெடி. பிறகு ஈசியான உருளைக்கிழங்கு காரம் குக்கர் அருப்பில் வைத்து 3.ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு. வெங்காயம் இரண்டு நைசாய் நறுக்கி கடுகுடன் சேர்த்து ஒன்றாக வதக்குங்க. வதங்கும் போதே உருளை தோல் சீவி சின்ன சின்னதாய் கட் செய்து வெங்காயத்துடன் சேருங்க.மிளகாய்த் தூள் காரம் உங்க விருப்பம் போல் இருக்கட்டும் சிறிதளவு தண்ணீர் விட்டு 2 விசில் வைத்து.மல்லி பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து லேசாக உருளைக்கிழங்கு எண்ணைய் பிரிந்து சுருண்டு வரும் அப்போது அடுப்பை நிறுத்தவும்.  உருளை காரம் ரெடி. அடுத்து கீரை கூட்டு கிரை எதுவாக இருந்தாலும் சரி நன்றாக கழுவி பொடிப்பொடிய கட் செய்து வைத்துக் கொள்ளவும் குக்கர் அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு காய்ந்ததும் கடுகு அரைஸ்பூன் கீரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை டம்ளர்) உப்பு சேர்த்து ஒரு விசில் வைக்கவும்.பின் நம்ம சாம்பர் வைக்க பருப்பு வைத்தோம் அதில் சிறிது 2 கரண்டி எடுத்து கிரையில் சேர்க்கவும். தேங்காய் துருவி இரண்டு ஸ்பூன் கீரையில் சேர்த்து, கொதி விட்டு திக்கானதும் இறக்கவும். பிறகு ரசம் பருப்புத்தண்ணீர் புளித்தண்ணீர் ஒரு தக்காளி உப்பு மிளகு பவுடர் சீரகப்பவுடர் இவையனைத்தையும் சேர்த்து கையால் நன்றாக கரைத்து கலந்து விட்டு. உப்பு.காரம் சரியாக இருக்கா என பார்த்துவிட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டுஇறக்கவும் பின் கடுகு கருவேப்பிளை பொரித்து போடவும் பின் பெருங்காயத்தூள் மல்லித்தழை சேர்க்கவும் ரசம் ரெடி. சாதம்.ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் சாதம் வேக வைத்து 4 விசில் வையுங்க.குக்கரில் சாதாம் ரெடி இப்ப சூப்பரான மதிய சாப்பாடு ரெடி.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா