இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

 பூண்டு மசித்த குழம்பு  தேவையான பொருட்கள் பூண்டு - 1/2 கப், சின்னவெங்காயம்-6, மிளகாய் வற்றல்- 6, புளி-2 டேபிள் ஸ்பூன், வெல்லம் சிறிது. சீரகம்-கடுகு, வெந்தயம்-தலா 1/2 டீஸ்பூன். செய்முறை மிளகாயை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டு. வெங்காயம் வதக்கி அரைக்கவும். புளியைக்கரைத்து இத்துடன் அரைத்த விழுது, பொடி செய்த மிளகாய், வெல்லம் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். கடைசியாக சீரகம், கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும். இந்தக் குழம்பில் முழுப்பூண்டும். சேர்க்கலாம். சின்ன வெங்காயக்குழம்பு  தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம்- கப், பூண்டு-8 ஒரு பல், புளிப்பேஸ்ட்- 2 டேபிள்ஸ்பூன், தக்காளி-2, மிளகாய் வற்றல் - 6, தனியா-2 டீஸ்பூன், வெந்தயம்-1/2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு இன்ச், தே.துருவல்- 1/4 கப், கடுகு-1/2 டீஸ்பூன். செய்முறை வாணலியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளியை வதக்கவும். மிளகாய், தனியா, வெந்தயம், இஞ்சி, தே.துருவலை வறுத்து அரைக்கவும். வதக்கிய பொருட்களுடன் புளிபேஸ்ட், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதித்தபின் அரைத்த பொருட்களைச்

https://www.kalaireal360.xyz/

என்னுடைய மற்றும ஒரு சமையல் பிளாக் எல்லோரும் பாருங்க https://www.kalaireal360.xyz/?m=1 https://www.kalaireal360.xyz/

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா

 மல்லி-பனீர் ஃப்ரை பனீர் துண்டுகள் - ஒரு கப், கொத்துமல்லித்தழை, புதினா - தலா ஒரு கைப்பிடியளவு, பச்சை மிளகாய் - 3, சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. கொத்துமல்லி, புதினா இலைகளை சுத்தம் செய்து மிக்ஸியில் போடவும். அதனுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் சற்று எண்ணெய் கூடுதலாக விட்டு, பனீர் துண்டுகள், அரைத்த கொத்துமல்லி விழுது சேர்த்து நன்கு கிளறி இறக்கி, சப்பாத்தியுடன் பரிமாறவும். மல்லி-பனீர்-சன்னா சாலட் தேவையானவை: கொண்டைக்கடலை ஒரு கப், பனீர் துண்டுகள் - அரை கப், உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம் - தலா ஒன்று, கொத்துமல்லித்தழை - ஒரு கப், எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு. செய்முறை: கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் வேகவைத்து தனியாக வைக்கவும். உருளைக்கிழங்கையும் வேக வைத்து தோலை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். கேரட்டை தண்ணீரில் நன்றாக கழுவி துருவிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, பனீர் துண்டுகள், வெங்காயம், கேரட் துருவல், சுத்த

முட்டைக்கோஸ்குருமா&வெள்ளை' குருமா

 முட்டைக்கோஸ்குருமா தேவையானவை: முட்டைக்கோஸ் ஒரு கப், எண்ணெய் - 10 டேபிள் ஸ்பூன், சிறியதாக நறுக்கிய உருளைக்கிழங்கு 4 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, சீரகம் ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, பட்டை - சிறிய துண்டு, மல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த்துருவல் - கால் கப், பச்சைமிளகாய் - 2, கசகசா - அரை டீஸ்பூன், தக்காளி - ஒன்று. செய்முறை: நறுக்கிய முட்டைக்கோஸுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கை பொரித்து, தனியே வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் பிரிஞ்சி இலை, பட்டை, சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, வெந்த முட்டைக்கோஸைச் சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து இரண்டு கொதி விட்டு, பொரித்த உருளை, கொத்துமல்லித்தழை சேர்த்து இறக்கவும். குறிப்பு: சப்பாத்தி / பூரி / ரொட்டிக்கு ஏற்றது. வெள்ளை' குருமா தேவையானவை: நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் (மூன்றும் சேர்த்து) - ஒரு கப், பச்சைப்பட்டாணி - கால் கப், உப்பு - தேவைக்கு,

உருளை கேப்ஸிகம் குருமா&பஜ்ஜி மிளகாய் - ஸ்வீட்கான் குருமா

 உருளை கேப்ஸிகம் குருமா தேவையானவை: பெரிய சைஸ் உருளைக்கிழங்கு, குடைமிளகாய், பெரிய வெங்காயம் தலா ஒன்று, தக்காளி - 2, உப்பு - தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் 2. மசாலா பவுடர்கள்: மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், தனியா பவுடர் ஒரு டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன். வெறும் வாணலியில் வறுத்து அரைக்க: வேர்க்கடலை, முந்திரித் துண்டுகள் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன். செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேகவிட்டு தனியே வைக்கவும். வெறும் வாணலியில் வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, மெலிதாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மசாலா பவுடர்கள், உப்பு சேர்த்து வதக்கி, அரை வேக்காடாக வெந்த உருளையை நீருடன் சேர்த்துக் கலந்து, பாத்திரத்தை மூடவும். காய்கள் நன்றாக வெந்ததும், அரைத்த விழுது, நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும

மிக்ஸட் வெஜிடபிள்குருமா&சென்னா குருமா

 மிக்ஸட் வெஜிடபிள்குருமா  தேவையானவை: நறுக்கிய கேரட், பீன்ஸ், சுத்தம் செய்த காலிஃபிளவர், பச்சைப்பட்டாணி தலா கால் கப், வதக்க: எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், தக்காளி, பெரிய வெங்காயம் தலா ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு. வெறும் வாணலியில் வறுக்க: பட்டை ஒரு சிறிய துண்டு, பிரிஞ்சி இலை - ஒன்று, கிராம்பு - 3, கசகசா - ஒரு டீஸ்பூன், பொடி வகைகள்: சில்லி பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன், தனியா பவுடர் ஒரு டீஸ்பூன், அரைக்க: பச்சைமிளகாய்3.தேங்காய்த்துருவல் கால் கப், முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன். மேலே தூவி அலங்கரிக்க: நறுக்கிய கொத்துமல்லித்தழை 2 ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் அளவான நீர் ஊற்றி, உப்பு சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளைப் போட்டு வேகவைக்கவும். வெறும் வாணலியில் வறுப்பதற்குக் கொடுத்தவற்றை வறுத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர் சில்லி பவுடர், தனியா பவுடரை சேர்த்து வதக்கி, வெந்த காய்களை நீருடன் சேர்த்து, வாணலியில் வறுத்து வைத்தவற்றை மிக்ஸி

பாலக் உருளை குருமா&பாலக்--பனீர் குருமா

 பாலக் உருளை குருமா தேவையானவை: நறுக்கிய பசலைக்கீரை 2கப், நறுக்கிய உருளைக்கிழங்கு கப், உப்பு தேவைக்கு, எண்ணெய் கால் 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று, சில்லி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன். அரைக்க: சோம்பு அரை டீஸ்பூன், முந்திரித்துண்டுகள், பொட்டுக்கடலை தலா ஒரு டேபிள் ஸ்பூன், தக்காளி - ஒன்று, தேங்காய்த்துருவல் 6 டேபிள் ஸ்பூன், பூண்டு 3 பற்கள். வெந்தகீரையை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டு, பிறகு மிக்ஸியில் நைசாக அரைக்கவும் (அப்போதுதான் கீரையின் நிறம் மாறாமல் இருக்கும்). அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு, கெட்டியாக நைசாக அரைக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுது, சில்லி பவுடர், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் வெந்த உருளையைச் சேர்த்து, கால் கப் தண்ணீர் விட்டு, இரண்டு கொதி விட்டு, அரைத்த கீரை விழுதைச் சேர்த்து மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும். செய்முறை: உருளைக்கிழங்குடன் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து, தோலை உரித்து, நறுக்கவும். பசலைக்கீரையுடன் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து வேகவ

cooking https://www.kalaireal360.xyz/

My website https://www.kalaireal360.xyz/  பல சமையல்  வகைகள்

மீன் பிரியாணி&இறால் பிரியாணி

 மீன் பிரியாணி  தேவையானவை பாகமதி அரிசி - கப், மீன் - அரை கிலோ, லவங்கம், பிரிஞ்சி இலை- தலா ஒன்று, கிராம்பு-2, புதினா ஒரு கைப்பிடியளவு கொத்துமல்லித்தழை- சிறிதளவு, பச்சையிகைாய்- நெய்-2 டேபிள் ஸ்பூன், பிரி யாணி மசாலா இஞ்சி, பூண்டு விழுது-ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்- டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி-3 தண் -5 முந்திரி விழுது டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு செய்முறை] மீன் துண்டுகளில் மசாலா தடவி, சூடான எண்ணெயில் பொரித்து தனியாக வைக்கவும், அரிசியை கழுவி அரைமணி நேரம் ஊ வைக்கவும் வாணலியில் எண்ணெயை சூடாக்கி பிரிஞ்சி இலை, கிராம்புவைங்கம் சேர்த்து வதக்கி, குறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும் பின்னர் புதினா, கொத்துமல்லி இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து போக வதக்கி நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், பிரியாணி மசா சேர்த்து கிளறி, றவைத்த அச்சியை தண்ணீரோடு சேர்க்கவும். பின்னர் முந்திவிழுது. உட்பு சேர்த்து கண்டிபதும், மூடி நிமிடம் அடுப்பை மிதமான ட்டில் வைக்கவும், பின்னர் நெய், புதினா சேர்த்து வெறி இறக்கவும். வேறொரு பாத்திரத்தில் ஒரு லேயர் பிரியாணி ஒரு லேயர் மீன் என்று மாற்றி மாற்றி பரப்பி,

பனீர் கோப்தா பிரியாணி &கோதுமை ரவை-மூலிகை பிரியாணி

 பனீர் கோப்தா பிரியாணி தேவையானவை 3 பட்டை, கிராம்பு, ஏலக்காய், அரிசி ஒரு கப், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பனீர்த் துருவல் அரை கப், மிளகு, சீரகப்பொடி ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் 4, எலுமிச்சைச் - சாறு ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் தலா அரை டீஸ்பூன், பிரியாணி இலை - தாளிக்க, கொத்துமல்லித்தழை சிறி தளவு, சோள மாவு, உப்பு, எண்ணெய்-தேவையான அளவு. செய்முறை பனீர்த் துருவலுடன் உப்பு, மிளகு, சீரகப் பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, எலுமிச்சைச் சாறு சேர்த்து பிசறவும். பின்னர் சோள மாவு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், 'பனீர் கோப்தா' தயார்! அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மீதமுள்ள பச்சை மிளகாய்த் துண்டுகள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி, அரிசியை களைந்து சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு, முக்கால் பதம் வேகவிடவும். பின்னர் பனீர் கோப்தாக்களை சேர்த்து கலந்

சோயா பிரியாணி ரெடி

தேவையானவை: பச்சரிசி - 2 கப், சோயா சங்க்ஸ் - 100 கிராம், பச்சை மிளகாய் - 3, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு - தலா 3, எண்ணெய் - 4 டீஸ்பூன், கொத்துமல்லி மேலே தூவுவதற்கு சிறிது, உப்பு - தேவையான அளவு. செய்முறை: இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் அதில் சோயாவைப் போட்டு, சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் வேக விடவும். வெந்தவுடன் சோயாவை எடுத்து ஆறவைத்து பிறகு நீரை பிழிந்து விடவும்.. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதைப் போட்டு சில நொடிகள் வதக்கவும். பச்சை வாடை சற்று போனவுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள சோயாவை அதில் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும். இரண்டு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து, இதனுடன் அரிசி, சோயா கலவை, உப்பு சேர்த்து கிளறிவிட்டு, குக்கரை மூடி வேக விடவும். (ஒரு கப் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு பதிலுக்கு ஒரு கப் தேங்காய்ப்பால் கூட சேர்க்கலாம்) மூன்று விசில் வந்தவுடன் இறக்கி, ஆவி அடங்கியவுடன் எட

பன்னீர்நூடுல்ஸ் ரெடி

தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு கப், பன்னீர் 100 கிராம், வெங்காய விழுது, தக்காளி விழுது - தலா கால் கப், தயிர் 4 டீஸ்பூன், பச்சைமிளகாய் 1, மஞ்சள்தூள், சீரகத்தூள் தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் தலா அரை டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது, தனியாத்தூள் தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கொதிக்கும் நீரில் நூடுல்ஸை போட்டு பாதியளவு வேகவைத்து நீரை வடிக்கவும். பின் அதை குளிர்ந்த நீரில் அலசி நீரை வடிய விடவும். அகலமான கடாய் ஒன்றில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய பச்சைமிளகாயை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காய விழுது, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி விழுதுஅல்லது தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின்னர் பன்னீர் (க்யூப் )சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு வேக விடவும். கலவையில் நீர் வற்றி கெட்டியாக வந்ததும் நூடுல்ஸைச் சேர்த்து கிளறி இறக்கி, சூடாக பரிமாறவும்.

கொத்துமல்லி பிரியாணி தயார்..

தேவையானவை: பாசுமதி அரிசி ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - 2. வெங்காயம் - 1, எண்ணெய் 2 டேபிள்ஸ்யூன், தேங்காய்ப்பால் - அரை கட்ட கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பிரியாணி இலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. அரைக்க: . பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு. 6.தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன். பட்டை லவங்கம் - தலா 2. செய்முறை: அரைக்க கொடுத்தவற்றை நைஸாக அரைக்கவும். அரிசியைக் களைந்து கால் மணி நேரம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தோல் உரித்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலா மற்றும் தூள் வகைகள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் தேங்காய்ப்பால் ஊற்றி மீதத்திற்கு நீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க துவங்கியதும் அரிசி சேர்த்து கலந்து விடவும். மீண்டும் கொதிக்க துவங்கியதும் மூடி சிறு தீயில் வைத்து வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சுவ

சப்பக்கி இட்லி & சாமை இட்லி

 தேவையானவை: இட்லி அரிசி ரவை, நைலான் ஜவ்வரிசி தலா ஒரு கப், புளித்த தயிர் - 2 கப், தேங்காய்த்துருவல் - கால் கப், கடுகு ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் 5, முந்திரி - 20, கறிவேப்பிலை - 2 கொத்து, கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு, உப்பு, தண்ணீர் - தேவைக்கு. செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி அரிசி ரவை, ஜவ்வரிசி, புளித்த தயிர், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்தை விட சற்று நீர்க்க கரைக்கவும். இந்த மாவை 8 மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் இதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். வாணலியில் கடுகு தாளித்து, முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் தேங்காய்த்துருவலை சேர்த்து கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் லேசாக எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, 12 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.  சாமை இட்லி தேவையானவை: சாமை - 4 கப், உளுந்தம் பருப்பு ஒரு கப வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - செய்முறை: சாமையை மூன்று மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைக்கவும். உளுந்தம் பருப்பையும் வெந்தயத்தையும் சேர்த

காலிஃபிளவர் மஞ்சூரியன்

 காலிஃபிளவர் மஞ்சூரியன் தேவையானவை: காலிஃபிளவர் - 1, பெரிய வெங்காயம் 5, தக்காளி - கால் கிலோ, சோளம மிளகாய்த்தூள் - தலா 1 ஸ்பூன், வெங்காயத்தாள் - 3 (பொடியாக நறுக்கவும்), வினிகர் - 1 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் - 2, இஞ்சி, பூண்டு. விழுது - 1 ஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேனை அளவு. செய்முறை: உப்பு கலந்த நீரில் காலிஃபிளவரை 10 நிமிடம் கவிழ்த்து வக்கவும். பின்னர் அதை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிவிடவும். பின்னர் நறுக்கிய காலிஃபிளவரை சேர்த்து 3 நிமிடம் வேகவைத்து நீரை வடிக்கவும். பின்னர் அதை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளியை நீரில் சில நிமிடம் வேகவைத்து தோலுரித்து, அரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி வெங்காயத்தாள், இஞ்சி, பூண்டு விழுது, கீறிய பச்சைமிளகாய், பொரித்த காலிஃபிளவர் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளிச்சாறு, மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். சோளமாவுடன் சிறிதளவு நீர் விட்டு கரைத்து ஊற்றி, வி

குடைமிளகாய் ஃபிரை &வாழைக்காய் ஃப்ரை & பாகற்காய் ஃபிரிட்டர்ஸ்

 குடைமிளகாய் ஃபிரை தேவையானவை: குடைமிளகாய், தக்காளி - தலா 1. வெங்காயம் - 2, மிளகு சீரகத்தூள், தனியாத்தூள் - தலா 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், சதுரமாக நறுக்கிய குடைமிளகாயை போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகு, சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.  வாழைக்காய் ஃப்ரை தேவையானவை: வாழைக்காய் - 2, பிரெட் துண்டுகள் - 3, துருவிய காலிஃபிளவர் - அரை கப்,கரம்மசாலாத்தூள், மாங்காய்த்தூள், இட்லி மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், நெய் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு.  வாழைக்காய் தோல் சீவி வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து, நீரை பிழிந்து, அதை வாழைக்காயோடு சேர்க்கவும். பின்னர் நெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து, பிசைந்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான நெய்யில் பொரித்து எடுக்கவும். பாகற்காய் ஃபிரிட்டர்ஸ் தேவையானவை: பெரிய சைஸ் பாகற்காய் - 2, சோள மாவு, மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, சோ

மலாய் கொஃப்தா மசாலா &கேரட் சாட் மசாலா

 மலாய் கொஃப்தா மசாலா  தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2, உருளைக்கிழங்கு - 2, கேரட் - 2, மஞ் தாள்-Vடீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், கரம்மசாலா - % டீஸ்பூன், எண்ணெய் - 150 மிலி, உப்பு - தேவையான அளவு, சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன், பிரட்ஸ்லைஸ் - 4, லைம் ஜூஸ் ஒரு டீஸ்பூன்.  செய்முறை: உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் சுத்தம் செய்து வேசு வைத்து தனித்தனியாக மசித்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு கேரட்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து வதக்கி, பிரட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கலவையில் சேர்க்கவும். அடுப்பை அணைத்து லைம் ஜூஸ் கலந்து, சோளமாவுடன் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி. எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்க எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்- 3, தக்காளி - 2, மஞ்சள்தூள் டீஸ்பூன், மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன், பட்டை - 2, லவங்கம் - 2, உப்பு, கொத்துமல்லித்தழை - தேவையான அளவு. செய்முறை: பட்டை, லவங்கத்தை பொடித்துக் கொள்

கட்லெட்& வெஜ் வடை எப்படி செய்யலாம்.

உருளைக்கிழங்கு. கேரட்கோஸ்.பின்புடலங்காய் இவையனைத்தயும்நைசாக.துருவி இஞ்சி.பச்சைமிளகாய்.2.கடலைமாவு.ஸ்பூன் உருளைக்கிழங்குவேகவைத்துமசித்துக்கொள்ளவும் எல்லாக்காய்களையும்.சேர்த்துபிசைந்து தேவையானஉப்பு.காரம்சரிபார்த்துமல்லித்தழை சேர்த்து.பிறகு அடுப்பை பற்றவைத்து. 200 கிராம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடைகளாக செய்து பொரித்து எடுக்கவும். வடை ரெடி. பிறகு கட்லெட் இதே வெஜ்கலவையுடன். சிறிதுகரமசால்.சோம்பு பொடித்து ரஸ்க் அல்லது பிஸ்கட் (மேரி) 2 சேர்த்து. இந்த வெஜ் கலவைகளை கட்லெட்களாக செய்யவும். (இதில் உப்பு காரம். அவை அனைத்தும் உங்கள் விருப்பம் தான்)