மலாய் கொஃப்தா மசாலா &கேரட் சாட் மசாலா

 மலாய் கொஃப்தா மசாலா


 தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2, உருளைக்கிழங்கு - 2, கேரட் - 2, மஞ் தாள்-Vடீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், கரம்மசாலா - % டீஸ்பூன், எண்ணெய் - 150 மிலி, உப்பு - தேவையான அளவு, சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன், பிரட்ஸ்லைஸ் - 4, லைம் ஜூஸ் ஒரு டீஸ்பூன்.


 செய்முறை: உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் சுத்தம் செய்து வேசு வைத்து தனித்தனியாக மசித்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு கேரட்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து வதக்கி, பிரட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கலவையில் சேர்க்கவும். அடுப்பை அணைத்து லைம் ஜூஸ் கலந்து, சோளமாவுடன் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி. எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

கிரேவி தயாரிக்க


எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்- 3, தக்காளி - 2, மஞ்சள்தூள் டீஸ்பூன், மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன், பட்டை - 2, லவங்கம் - 2, உப்பு, கொத்துமல்லித்தழை - தேவையான அளவு.


செய்முறை: பட்டை, லவங்கத்தை பொடித்துக் கொள்ளவும். வெங்காயம். தக்காளியை பேஸ்ட் போல தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காய விழுதை வதக்கி, பின் தக்காளியைச் சேர்த்து வதக்கி மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, பட்டை லவங்கப்பொடி உப்பு: சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்தபின் பொரித்து வைத்த கோஃப்தா உருண்டையைப் போட்டு கொத்துமல்லித் தழை தூவி இறக்கவும்.

  கேரட் சாட் மசாலா

தேவையான பொருட்கள்: தயிர் - 2 கப், வெங்காயம் - 2, காரட் - ஒன்று, பீட்ரூட் ஒன்று, காராபூந்தி - /% கப், மிளகுத் தூள் /2 டீஸ்பூன், சாட் மசாலா - * டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு.


 செய்முறை: தயிரை துணியில் கட்டித் தண்ணீரை வடிக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும். கேரட், பீட்ரூட்டைத் துருவிக் கொள்ளவும். தயிரில் மிளகுத் தூள், உப்பு, சாட் மசாலா, வெங்காயம், காரட், பீட்ரூட், காராபூந்தி சேர்த்து கிளறவும்.


  தேவையெனில் முள்ளங்கி, சௌ சௌ கூட சேர்க்கலாம். பெருங்காயம் தூவலாம்

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா