முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மலாய் கொஃப்தா மசாலா &கேரட் சாட் மசாலா

 மலாய் கொஃப்தா மசாலா  தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2, உருளைக்கிழங்கு - 2, கேரட் - 2, மஞ் தாள்-Vடீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், கரம்மசாலா - % டீஸ்பூன், எண்ணெய் - 150 மிலி, உப்பு - தேவையான அளவு, சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன், பிரட்ஸ்லைஸ் - 4, லைம் ஜூஸ் ஒரு டீஸ்பூன்.  செய்முறை: உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் சுத்தம் செய்து வேசு வைத்து தனித்தனியாக மசித்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு கேரட்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து வதக்கி, பிரட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கலவையில் சேர்க்கவும். அடுப்பை அணைத்து லைம் ஜூஸ் கலந்து, சோளமாவுடன் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி. எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்க எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்- 3, தக்காளி - 2, மஞ்சள்தூள் டீஸ்பூன், மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன், பட்டை - 2, லவங்கம் - 2, உப்பு, கொத்துமல்லித்தழை - தேவையான அளவு. செய்முறை: பட்டை, லவங்கத்தை பொடித்துக் கொள்
சமீபத்திய இடுகைகள்

கட்லெட்& வெஜ் வடை எப்படி செய்யலாம்.

கட்லெட்&வெஜ்வடைஉருளைக்கிழங்கு. கேரட்கோஸ்.பின்புடலங்காய் இவையனைத்தயும்நைசாக.துருவி  இஞ்சி.பச்சைமிளகாய்.2.கடலைமாவு.ஸ்பூன் உருளைக்கிழங்குவேகவைத்துமசித்துக்கொள்ளவும் எல்லாக்காய்களையும்.சேர்த்துபிசைந்து தேவையானஉப்பு.காரம்சரிபார்த்துமல்லித்தழை சேர்த்து.பிறகு அடுப்பை பற்றவைத்து. 200 கிராம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடைகளாக செய்து பொரித்து எடுக்கவும். வடை ரெடி. பிறகு கட்லெட் இதே வெஜ்கலவையுடன். சிறிதுகரமசால்.சோம்பு பொடித்து ரஸ்க் அல்லது பிஸ்கட் (மேரி) 2 சேர்த்து. இந்த வெஜ் கலவைகளை கட்லெட்களாக செய்யவும். (இதில் உப்பு காரம். அவை அனைத்தும் உங்கள் விருப்பம் தான்)

கடப்பா எல்லா வகையான உணவுகளுக்கும் தொட்டு சாப்பிடலாம்

உருளைக்கிழங்கு.கேரட்.பின்ஸ். பட்டாணி. தக்காளி 3 இவையெல்லாம் சேர்த்து ஒருகப். பயத்தம்பருப்பு 1கப ் இவற்றை குக்கரில் போட்டு 4 கப்தண்ணீர்.ஒரு டீஸ்பூன் மஞ்சத்தூள் சேர்த்து மூன்று விசில் வைத்து வேகவைக்கவும்.பிறகு 4ஸ ்பூன் தேங்காய் துருவி மிக்ஸி ஜாரில்போடுங்க.அதனுடன் 2 ஸ்பூன் போட்டுக்கடலை. பட்டைகிராம்பூ.ஏலக்காய். பச்சைமிளகாய் 5 (காரத்திக்கு ஏற்றார்போல்)) இவற்றை மிக்ஸி ஜாரில் நைசாகஅரைத்து.குக்கரில் நாம் வைத்திருக்கும் பருப்புடன் சேர்த்து. தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து மல்லித்தழை. கருவேப்பிலை போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு சூப்பரான கடப்பாரெடி.இட்லி.தோசை.சப்பாத்தி.பூரி. ரவாதோசை.கோதுமை தோசை எல்லா வைகையான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

சாப்பாடு ரெடி. சாதம் .முருங்கைக்காய் சாம்பார்.கீரை கூட்டு. உருளைக்கிழங்கு காரம் தக்காளிரசம். சூப்பரான மதிய சாப்பாடு ரெடி எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்

 முருங்காய் சாம்பார் . பருப்பு 1 கப் வேகவைத்து தனியாக எடுத்து வையுங்க‌ (துவரம்பருப்பு நன்றாக வேகவைத்து குழைவாக இருக்க வேண்டும்)முருங்காய்யை சிறிய சிறியதாய் நறுக்கி வைத்துக்கவும். வெங்காயம்1தக்காளி 2 சிறிதாக வெட்டி வைத்துக்கவும்.புளி தண்ணீர் சிறிது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் 3 ஸ்பூன் விட்டு காய்ந்ததும் கடுகு. உபருப்பு சிறிதளவு கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் ஒன்று நறுக்கி வெங்காயம் தக்காளி இவை அனைத்தும் சேர்த்து எண்ணையில் வதக்கி.புளி தண்ணீர் சேர்த்து உப்பு.சாம்பார் மிளகாய்தூள் (இவைகளை உங்களுக்கு தேவையான அளவு)காரம் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.பிறகு நாம் வேக வைத்த பருப்பு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வையுங்க. முருங்க்காய் வெந்ததும் இறக்குங்க பிறகு மல்லித்தழை பெருங்காயத்தூள் சேர்த்திடுங்க முருங்கக்காய் சாம்பார் ரெடி. பிறகு ஈசியான உருளைக்கிழங்கு காரம் குக்கர் அருப்பில் வைத்து 3.ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு. வெங்காயம் இரண்டு நைசாய் நறுக்கி கடுகுடன் சேர்த்து ஒன்றாக வதக்குங்க. வதங்கும் போதே உருளை தோல் சீவி சின்ன சின்னதாய் கட் செய்து வெங்காயத்துடன் சேருங்க.மிளகாய்த் தூள் காரம் உங்க

காரப்பொரி

 2 கப் பொரி அடுப்பை பற்ற வைத்து. வாணலியில் இந்தப் பொரியை கரகரப்பாக வறுக்கவும்.பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு. வெறும் வாணலியில் ஒரு ஸ்பூன் மிளகு.ஒரு ஸ்பூன் சீரகம் வறுத்து நைசாக மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தது 4 காய்ந்த மிளகாய்.கருவப்பிலை. மஞ்சளதூள் அரை டீஸ்பூன். உப்பு தேவையான அளவு பிறகு பொடி செய்து வைத்திருக்கும்.மிளகு சீரகப்பவுடர் மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி பொரியையும் சேர்த்து.எல்லா பொரியிலும் உப்பு.காரம்கசேர்ந்து கரகரப்பாக இருக்கும் போது.பாத்திரத்தில் மாற்றவும்.காரப்பொரி ரெடி. (உப்பு.காரம் உங்களுக்கு தேவையான அளவு ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்துக் கொள்ளலாம்).      இதேபோல் அவல் பொரிப்பொறி. சோளப்பொறி(இவை டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் சுத்தம்செய்து தரமானதாக கிடைக்கும் அதனை வாங்கி நம்முடைய விருப்பத்தின் போல் மொரமொரப்பாக) வறுத்துக் கொள்ளலாம். அனைத்திற்கும்.உப்பு. காரம் உங்களுடைய விருப்பம் போல் சேர்க்க வேண்டும்.

இனிப்பு பொரி கார்த்திகை ஸ்பெஷல்

பொரி ஒரு கப்( நெல் பொரி அல்லதுஅவல் பொரி) அடுப்பை ஆன் பண்ணுங்க. வாணலியை அடுப்பில் வைத்து மொரமொர என பொரியை  சூடு செய்து பாத்திரத்தில் வைத்து விடுங்கள். பொட்டுகடலை. எள்ளு. தேங்காய் துருவி சிவக்க வறுத்து பொரியுடன் சேருங்கள் .2கப் வெல்லம் சுத்தம் செய்து பாகு காய்ச்சி. (ஒரு தட்டில் தண்ணீர் வைத்து காய்ச்சிய பாகுவை அதில் விடுங்க அந்த வெல்லம் கையில் எடுக்கும் போது. பந்து போல் உருண்டு வரும் ) வெல்லப்பாகு எடுத்து பாத்திரத்தில் வைத்துள்ள பொரியுடன் சேருங்கள். நல்லா கிளறி சூடு ஆறுவதற்க்குள்.அரிசி மாவு தொட்டு உருண்டைகளாக பிடித்து அடிக்கடி வைக்கவும். (பொரி ஆறிவிட்டால் உருண்டை பிடிக்க வராது அப்படி இல்லை என்றால் சூடாக இருக்கும்போதே பொரியை அழுத்தி மூடி வைக்கவும்) கார்த்திகை பொரி ரெடி.

மஸ்ரூம் மசாலா

 மஸ்ரூம் 250 கிராம் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். (ஒரு அகலமான பாத்திரத்தில் 3.தண்ணீர் விட்டு அதில் 1ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு மஸ்ரூம் ஐ அலசிவிட்டு கொதிக்கும் வெந்நீரில் போட்டு10 நிமிடம் மூடி வைக்கவும்.பிறகு அதிலுள்ள கருப்பாக இருக்கும் பகுதிகளை  நீக்கிவிட்டு சுத்தம் செய்து தட்டில் வைத்துக் கொள்ளவும்)அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள். அரை டீஸ்பூன் மிளகுத்தூள்.கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும். பட்டை .கிராம்பு. ஏலக்காய் பொடி செய்து.அதில் தூவவும் வாசனை நன்கு வரும் போது‌ வெங்காயம் 4 சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி 2 பொடியாக நறுக்கி நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன். மல்லித் தூள் அரை டீஸ்பூன். பிறகு நாம் கலந்து வைத்திருக்கும் மஸ்ரூம்  இதனுடன் சேர்த்து. சிறிதளவு உப்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை ஆப் நிறுத்தவும்.பின்புஒரு பாத்திரத்தில் மாற்றவும். அதன்மேல் மல்லித்தழை தூவ