இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனீர் கோப்தா பிரியாணி &கோதுமை ரவை-மூலிகை பிரியாணி

 பனீர் கோப்தா பிரியாணி தேவையானவை 3 பட்டை, கிராம்பு, ஏலக்காய், அரிசி ஒரு கப், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பனீர்த் துருவல் அரை கப், மிளகு, சீரகப்பொடி ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் 4, எலுமிச்சைச் - சாறு ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் தலா அரை டீஸ்பூன், பிரியாணி இலை - தாளிக்க, கொத்துமல்லித்தழை சிறி தளவு, சோள மாவு, உப்பு, எண்ணெய்-தேவையான அளவு. செய்முறை பனீர்த் துருவலுடன் உப்பு, மிளகு, சீரகப் பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, எலுமிச்சைச் சாறு சேர்த்து பிசறவும். பின்னர் சோள மாவு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், 'பனீர் கோப்தா' தயார்! அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மீதமுள்ள பச்சை மிளகாய்த் துண்டுகள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி, அரிசியை களைந்து சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு, முக்கால் பதம் வேகவிடவும். பின்னர் பனீர் கோப்தாக்களை சேர்த்து கலந்