மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா

 மல்லி-பனீர் ஃப்ரை


பனீர் துண்டுகள் - ஒரு கப், கொத்துமல்லித்தழை, புதினா - தலா ஒரு கைப்பிடியளவு, பச்சை மிளகாய் - 3, சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


கொத்துமல்லி, புதினா இலைகளை சுத்தம் செய்து மிக்ஸியில் போடவும். அதனுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் சற்று எண்ணெய் கூடுதலாக விட்டு, பனீர் துண்டுகள், அரைத்த கொத்துமல்லி விழுது சேர்த்து நன்கு கிளறி இறக்கி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.


மல்லி-பனீர்-சன்னா சாலட்

தேவையானவை:

கொண்டைக்கடலை ஒரு கப், பனீர் துண்டுகள் - அரை கப், உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம் - தலா ஒன்று, கொத்துமல்லித்தழை - ஒரு கப், எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு.


செய்முறை:


கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் வேகவைத்து தனியாக வைக்கவும். உருளைக்கிழங்கையும் வேக வைத்து தோலை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். கேரட்டை தண்ணீரில் நன்றாக கழுவி துருவிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, பனீர் துண்டுகள், வெங்காயம், கேரட் துருவல், சுத்தம் செய்த கொத்துமல்லித்தழை உப்பு, எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து பரிமாறவும்.


மல்லி-பிரெட் டோக்ளா

தேவையானவை:

பிரெட் துண்டுகள் 4, - மல்லிச்சட்னி - அரை கப், தயிர் - 4 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, எண்ணெய், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை:


பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி எடுக்கவும். மல்லிச் சட்னியுடன் தயிரை கலக்கவும். பிரெட்டின் மீது மல்லி- தயிர் கலவையை லேசாக தடவவும். அகலமான தட்டில். : பிரெட்டை சிறிய துண்டுகளாக வெட்டி அடுக்கவும். அதன் மீது கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து சேர்த்து. தேங்காய்த்துருவல், கொத்துமல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறவும். 


 .


.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு