இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரவா கேசரி

ரவா 1கப் லேசாக வறுத்துக்கொள்ளவும்.கடாயில் தண்ணீர் 3கப் தண்ணீர் கொதிவிட்டு ரவா சேர்த்து கைவிடாமல் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வேக வைக்கவும். அதில் 2 கப் சீனி.கேசரி பவுடர் சேர்த்து. கட்டி இல்லாமல் கரைத்துவிட வும்100.கிராம் நெய்யில் முந்திரி வறுத்து.போடவும் 10 கிராம் ஏலக்காய்பவுடர் போடவும் நன்றாக கிளறவும் நெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.கேசரி ரெடி.

சிம்பிள் ஆலு மசாலா

 உருளைக்கிழங்கு தோல் உரித்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் 2 கப்  நைசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டு 10 பல் தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் ஒரு கப். வாணலியை அடுப்பில் வைத்து. நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம். சோம்பு தலா ஒரு ஸ்பூன் சேர்த்து. பூண்டு .வெங்காயம் நறுக்கிய உருளைக்கிழங்கு.( எண்ணெயில் வெந்து இருக்க வேண்டும் )சேர்த்து ஒரு ஸ்பூன் மிளகாய்தூள். ஒரு ஸ்பூன் மல்லி தூள். அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள். அரை ஸ்பூன் மஞ்சள் தூள். தேவையான அளவு உப்பு. தேங்காய் பால் சேர்த்து நன்றாக கிளறி பத்து நிமிடம் வேக வைத்து. பச்சை வாசனை போன பிறகு கெட்டியானதும் இறக்கவும். சிம்பிள் ஆலு மசாலா ரெடி.

கோபி மசாலா

 கொதிக்கும் வெந்நீரில் உப்பு சேர்த்து  .அடுப்பை அணைத்துவிட்டு. காலிஃப்ளவரை 10 நிமிடம் வெந்நீரில் போட்டு  காலிஃப்ளவரை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு 3 தக்காளி .2 வெங்காயம் நன்கு வதக்கி ஒரு தட்டில் ஆறவைத்து. பின் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும். பட்டை . சோம்பு அரை ஸ்பூன். இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்.அரைத்த வெங்காயம் தக்காளி.ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள். ஒரு ஸ்பூன் மல்லித் தூள். அரை ஸ்பூன் கரம் மசாலா. அரை ஸ்பூன் மஞ்சள் தூள். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .பிறகு சுத்தம் செய்த காலிஃப்ளவர் அரை டம்ளர் தண்ணீர் அதனுடன் சேர்த்து.பச்சை வாசனை போன பிறகு. எண்ணெய் பிரிந்து மேலே  வரும்போது இறக்கவும். கோபி மசாலா ரெடி.

சன்னா மசாலா

 முதல் நாள் இரவே சன்னா 2கப் தண்ணீர் விட்டு  ஊற வைக்கவும் . காலையில் குக்கரில் இரண்டு விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு  வெங்காயம் 3. தக்காளி 4 நறுக்கி ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் .வெங்காயம் தக்காளியை சிறிதாக நறுக்கி ஐந்து நிமிடம் வதக்கி ஆறவைக்கவும். பிறகு  பட்டை. கிராம்பு. ஏலக்காய் ஒரு பிடி கொண்டகடலை(சன்னா) சேர்த்து. மிக்ஸியில் நைஸாக அழைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து அதில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு  காய்ந்ததும் .அரை ஸ்பூன் சோம்பு .ஒரு ஸ்பூன்  பூண்டு பேஸ்ட் .அரைத்த விழுது .வேகவைத்த கொண்டைக்கடலை.  ஒரு ஸ்பூன் மிளகாய்தூள்.ஒரு ஸ்பூன் மல்லித் தூள்  அரை ஸ்பூன் சீரகம் தூள்.அரை ஸ்பூன் மிளகு தூள். தேவையான அளவு உப்பு .ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி. குக்கரில் மூன்று விசில் வைத்து இறக்கவும். சன்னா மசாலா ரெடி.

பெப்பர் பீஸ் மசாலா

 வெங்காயம் 4தக்காளி 5 வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் .வெங்காயம் தக்காளியை நன்றாக வதக்கி தட்டில் ஆறவைக்கவும் .பட்டாணி 2 கப் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும் .ஒரு ஸ்பூன் மிளகு . ஒரு ஸ்பூன் சீரகம் வறுத்து நைசாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். குக்கரின் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணைய் காய்ந்ததும் பட்டை. 2 கிராம்பு. ஏலக்காய் 2 .இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன். சேர்க்கவும் பச்சை வாசனை போன பிறகு ஆறவைத்த வெங்காயம் தக்காளியை நைஸாக அரைத்து கலக்கவும்  வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்கு கிளறவும் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் .மல்லித்தள் ஒரு டீஸ்பூன் .கறிவேப்பிலை. மஞ்சள் தூள் அரைடீஸ்பூன். கரம் மசாலா அரை டீஸ்பூன்  பொடித்து வைத்திருந்த மிளகு சீரகம் தேவையான அளவு உப்பு சேர்த்து. குக்கரில் 2 விசில் வைக்கவும் பெப்பர் பீஸ் மசாலா ரெடி.

பருப்பு அடை

 புழுங்கல் அரிசி ஒரு கப் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பு ஒரு கப் . துவரம்பருப்பு 1 கப் .உளுந்தம் பருப்பு அனரக் கப். இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில்  சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அரிசியுடன் இருபது காய்ந்த மிளகாய் .(தேவையான அளவு )பின் இரண்டு வெங்காயம் தேவையான அளவு உப்பு. பூண்டுப்பல் ஒரு பத்து .பெருங்காய பவுடர் ஒரு டீஸ்பூன். கறிவேப்பிலை  நைசாக அரைத்து மாவில் கலக்கவும் .அடை மாவு ரெடி .தோசைக்கல்லை கல் காய்ந்ததும் ஊற்றி. இருபுறமும்  சிவக்க எடுக்கவும் வெண்ணெய். வெல்லம் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

மசால் வடை

கடலைப்பருப்பு1 கப் எடுத்து 2மணிநேரம் ஊரவைக்கவும் மிக்ஸியில்.கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.1வெங்காயம்  2 பச்சைமிளகாய். கருவப்பில்லை.மல்லி இலை. இஞ்சி ஒரு  துண்டு.உப்பு தேவையான அளவு. 1 ஸபூன் மைதா மாவு. .அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ததும் சிறிது சிறிதாக வடைத்தட்டி  எடுக்கவும்.மசால்வடை ரெடி. ப்மசமசால் வடைபருப்பு

பீஸ் மசாலா

         பட்டாணி ஒரு கப் . உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் . எண்ணைய் காய வைத்து அதில் நான்கு பெரிய வெங்காயங்களை நறுக்கி பொன்னிறமாக வரும் வரை வதக்கி பின் மிக்ஸியில் அரைக்கவும் . குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் 50 கிராம் சேர்த்து உருகிய உடன் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட். அரைத்த வெங்காய விழுது. தக்காளி நான்கு பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பின் அதில் இரண்டு ஸ்பூன் மிளகாய்தூள் .ஒரு ஸ்பூன் மல்லித் தூள் .அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள் .வேகவத்த பட்டாணி. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி .குக்கரில் 3 விசில் வைத்து இறக்கவும் .சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து  பீஸ் மசாலா ரெடி 

குருமாப் பொடி

 ஒரு கப் துருவிய  தேங்காய். (டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும்) அரை கப் பொட்டுக்கடலை .இரண்டு ஸ்பூன் சோம்பு. கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன். இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் நைஸாக அடித்து. ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும் . சப்பாத்தி குருமா செய்யும் போது வெங்காயம். பச்சைமிளகாய் .தக்காளி .காய்கறிகள். இஞ்சி பூண்டு பேஸ்டுடன். குருமா பவுடர் தேவையான அளவு சேர்த்து சிறிது தண்ணீர் .உப்பு சேர்த்து இரண்டு விசில் வைத்து.இறக்கவும் குருமா தயார் செய்யலாம்.

ரவாபொங்கல்

         ரவா1 கப்  லேசாக வறுக்கவும்.ஒரு கடாயில் 2 1/2 கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன். ரவா சேர்த்து   வேக வைக்கவும். பின் வெல்லம் 2கப் சேர்க்கவும். அதில் 50 கிராம் நெய்யில் முந்திரி .திராட்சை .10 கிராம் ஏலக்காய்.சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். ரவா பொங்கல் ரெடி.

பால் பாயாசம்

 அரை லிட்டர் பால் அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சவும். வடித்த  பச்சைரிசி சாதம் ஒரு கரண்டி எடுத்து. ஒரு கிண்ணத்தில் நன்கு கடைந்து விட்டு . அதை கொதிக்கும் பாலில் கலந்து விடவும் .அரை லிட்டர் பாலுக்கு அரை கிலோ சீனி.( உங்களுக்கு தேவையான அளவு ) சீனி போடவும் ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து ஒரு வாணலியில் 100 கிராம் நெய் காய்ந்தவுடன் அதில் முந்திரிப்பருப்பு திராட்சையை வறுத்து அந்த பால்  பாயாசத்தில் கலக்கவும் ஏலக்காய் பவுடர் ஒரு பத்து கிராம் அளவிற்கு எடுத்து அந்த பயத்தில் கலக்கவும் இறுதியாக துளி உப்பு சேர்க்கவும் இப்பொழுது பால் பாயாசம் ரெடி

தக்காளி சட்னி பொடி

    கடலைப்பருப்பு 3 ஸ்பூன்  மிளகாய் 10.   சிறிது கருவேப்பிலை சேர்த்து நைசாக  அரைத்து  ஒரு டப்பாவில் வைத்துக்கொள்ளவும் தேவையான போது .வெங்காயம்.தக்காளி வதக்கி  இந்த பவுடர் 2ஸ்பூன் .உப்பு சேர்த் து  . மிக்ஸியில்  நைசாக 1சுற்றை  அரைத்தால். தக்காளிச்சட்னி ரெடி

புதினாப்பொடி

        புதினா இலை-2கட்டு அலசி சுத்தம்செய்து ஈரம் போக நிழலில் காயவைக்கவும்.வாணலியில் 2ஸ்பூன் எண்ணைய் விட்டு அதில் 4 பச்சை மிளகாய்.3 ஸ்பூன் உலுந்தம் பருப்பு.  காய்ந்த மிளகாய்  2 . காய்ந்த புதினா சேர்த்து வறுக்கவும் உப்பு. கால் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு . அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சற்று கொர கொரப்பாக அரைக்கவும். புதினா பொடி ரெடி

சர்க்கரைப்பொங்கல்

         குக்கரில்1கப் பச்சரிசி  ,5 கப் தண்ணீர் பயத்தம்பறுப்பு 2ஸ்பூன் வறுத்து அதை சேர்த்து 4 விசில் வைத்து இறக்கவும்.அடுப்பில்2கப் வெல்லம்  தண்ணீர் விட்டு (சுத்தம் செய்து )அகலமான பாத்திரத்தில் வெல்லம் .வெந்த சாதத்துடன்சேர்த்து  நன்றாக கிளறவும். பிறகு முந்திரி 50கிராம் .திராட்சை 10.கிராம் நெய்யில் வறுத்துசேர்க்கவும்..பின் ஏலக்காய் பவுடர்10 கிராம்.துளி உப்பு .நெய் 200கிராம்.சேர்த்து .பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் பிரிந்து வரும்போது இறக்கவும். சர்க்கரைப்பொங்கல் ரெடி.

பட்டாணி பன்னீர் மசாலா

          1 கப் பச்சைப் பட்டாணியை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இரண்டு பெரிய வெங்காயத்தை  பொடியாக நறுக்கி சேர்க்கவும் .தக்காளி 3 சிறிதாக அரிந்து சேர்க்கவும். அதில் ஒரு ஸ்பூன் மிளகு.1ஸ்பூன் மல்லித் தூள் .கரம் மசாலா அரை டீஸ்பூன். சீரகத்தூள் அரை டீஸ்பூன் சேர்த்து வதக்கவும் .அதனுடன் வேக வைத்த பட்டாணி. பன்னீர் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு கிளறவும். 10 நிமிடம் மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும். அதை 5 ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறவும். இரண்டு நிமிடம் மூடி வைத்து பின் ஒரு பாத்திரத்தில் மாற்றவும் பட்டாணி பனீர் மசாலா ரெடி

வெஜ் சால்னா

 குக்கரை அடுப்பில் வைத்து. இரண்டு ஸ்பூன் எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் போட்டு நன்கு வதக்கவும். ஒரு கப் வெங்காயம் 1 த.க்காளி 2 நைசாக அறிந்து வதக்கவும் .ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் .ஒரு ஸ்பூன் மல்லித் தூள் .கால் டீஸ்பூன் கரம் மசாலா .அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் .உப்பு சேர்த்து நன்கு கிளறவும் .ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி மல்லி இலை முந்திரிப் பருப்பு 7 கசகசா .தேங்காய் துருவல் 3 ஸ்பூன் சேர்த்து நைசாக அரைத்து. வதக்கிய காய்கறிகளுடன் சேர்த்து குக்கரின் மூடியை எடுத்து மூடி 2 விசில் விடவும்  .இப்ப வெஜ் சால்னா ரெடி. சப்பாத்தி .பரோட்டாவுடன் சாப்பிடலாம்.

பன்னீர்சப்பாத்தி

பன்னீர் சப்பாத்தி பன்னீர் 100கிராம் கோதுமை மாவு 2 கப்  கரம்மசாலா ஒரு ஸ்பூன் உப்பு யேவையான அளவு. அனைத்தையும் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்  பன்னீர் சப்பாத்தி மாவு ரெடி அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளை ஒரு அளவாக தேய்த்து இருபுறமும்  சிவக்க விட்டு எடுக்க வேண்டும் .பிறகு அதன் மேல் சிறிது நெய் தடவி அதில் வைக்கவும் சப்பாத்தி ரெடி வை அடுத்து சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சால்னா எப்படி செய்வது என்று  அடுத்த போஸ்ட்ல பார்க்கலாம் 

பயறுதோசை

 [ ] முதல் நாள் இரவே 1கப். பயரை தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். மறுநாள் அதை கழுவி நன்கு சுத்தப்படுத்தி கிரைண்டரில் அரைக்கவும். அதில் 4 பச்சை மிளகாய். ஒரு துண்டு இஞ்சி. இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவு தேவையான உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி மாற்றவும். பிறகு அடுப்பை பற்ற வைத்து. தோசைக்கல்லை அடுப்பில் போட்டு சூடு வந்ததும். அதில்.அந்த பயறு மாவை எடுத்து நைசாக தோசை உத்தவும். பிறகு அதன் மேல் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவவும். பிறகு ஒரு முடி எடுத்து அதை (ஒரு பக்கமா மூட வேண்டும். ஒரு நிமிடம் கழித்து வெந்ததும் அதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். பயறு தோசை ரெடி தயிர் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

மோர்க்குழம்பு

 வெள்ளை உளுத்தம்பருப்பு ஒரு கப். அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த அரை மணி நேரத்திற்கு பிறகு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் பின் ஒரு பாத்திரத்தில் மாற்றி. அதில் 1  வெங்காயம். 2 பச்சை மிளகாய். தேவையான அளவு உப்பு சேர்த்து வடை மாவு ரெடி செய்து வைக்க வேண்டும். அரைக்க  1 ஸ்பூன் துவரம் பருப்பு.அரை ஸ்பூன் சீரகம். 1 ஸ்பூன் மல்லி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.தண்ணீரை வடித்து .பின்  ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல் 3 பச்சை மிளகாய் .ஒரு துண்டு இஞ்சி . சேர்த்து  நைஸாக அரைக்கவும்.  அடுத்து இரண்டு கப் தயிரில் 500ml தண்ணீர் வைத்து இரண்டையும் நன்றாக கலக்கி அதில் அரைத்த துவரம் பருப்பு விழுதுகளை சேர்த்து.அடுப்பில் வைத்து ஒரு பாத்திரத்தில் நன்றாக கொதிக்க விடவும் .மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியில் 250 எண்ணையில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின் வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிது சீரகம் .கடுகு . கருவேப்பிலை. பெருங்காய பவுடர் செய்து வைத்திருக்கும் வடையையும் அந்த மோர் குழம்பு சேர்த்து 2 நிமிடம் கொதிவந்ததும். அடுப்பை அணைத்து விடவும்.  மோர்க்குழம்பு ரெடி . உருளைக்கிழங்கு காரம் செய்து  சாப்பிட்டால் நன்றாக

ஆலு மசாலா

            ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு ஒரு பட்டை இரண்டு கிராம்பு ஒரு ஏலக்காய் சேர்த்து வறுக்கவும் பிறகு 2 வெங்காயம் 2 தக்காளி ஒரு துண்டு இஞ்சி 2 பல் பூண்டு சேர்த்து வதக்கி வைக்கவும் சூடு ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் பிறகு குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மிளகுத்தூள். சீரகமத்தூள் தலா ஒரு ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்.உருளைக்கிழங்கு இவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 விசில் வைக்கவும் சிறிது நேரம் கழித்து  2 நிமிடம் கொதிக்க வைக்கவும்  பிறகு நான்கு ஸ்பூன் நெய் சேர்க்கவும்  ஆலு மசாலா ரெடி

வாழைப்பழ சப்பாத்தி

          2 கப் கோதுமை மாவுடன். ஒரு வாழைப்பழம் .சிறிது உப்பு .தேவையான அளவு தண்ணீர் சேர்த்து. மிருதுவாக பிசைந்து 15 நிமிடம் மூடி வைக்கவும்பின்பு சப்பாத்திகளாக செய்து    மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும்.  வாழைப்பழ சப்பாத்தி ரெடி.

ரவா தோசை

ஒரு கப் ரவை. அரை கப் மைதா .அரிசிமாவு இவை மூன்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும் அடுப்பில் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு   சிறிது கடுகு. சீரகம்.  கடலைப்பருப்பு. பச்சை மிளகாய் 3. வெங்காயம்-2 காரட். பீன்ஸ்  இரண்டு ஸ்பூன் இவை அனைத்தையும் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும் பிறகு நன்கு வதங்கியதும். அதை கரைத்து வைத்திருக்கும் ரவா தோசை மாவில் சேர்க்கவும் .பிறகு தேவையான உப்பு சேர்க்கவும்.மாவு ரெடி கல்லை அடுப்பில் போட்டு கல் காய்ந்ததும்  மாவை  தோசையை கல்லில் சுற்றி ஊற்றவேண்டும் இரண்டு பக்கமும் வெந்ததும் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும் ரவா தோசை ரெடி

பூண்டு வத்தக்குழம்பு

   பூண்டு 50 கிராம்  (தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்)  மிளகு சீரகம் தலா ஒரு ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு கடுகு பருப்பு வெந்தயம் தலா அரை ஸ்பூன் புளி எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சுத்தம் செய்து தேவையான அளவு  எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு. வெந்தயம். துவரம்பருப்பு ஆகியவற்றை நன்றாக வதக்கவும். பிறகு  பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அதனுடன் சேர்க்கவும்.  தேவையான அளவு உனக்கு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.மிளகு சீரகம் ஆகியவற்றை லேசாக வறுத்து அதை பொடி செய்து அதில் சேர்க்க வேண்டும். சாம்பார் சாம்பார் தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் அரை ஸ்பூன் சேர்த்து நன்கு கிண்டி  கொதிக்க வேண்டும். வந்தவுடன்  என்னை பிரிந்து தனியாக வரும் அப்பொழுது பெருங்காயத்தூள் சேர்த்து அதனுடன் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.இப்பொழுது பூண்டு வத்தக் குழம்பு ரெடி.

30 நாள் 30 சமையல்

              Day-------1 வாணலியில் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் கடலை பருப்பு கடுகு வெடித்ததும் பிறகு பச்சைமிளகாய் வெங்காயம் தக்காளி இவற்றை நன்கு வதக்கவும் பிறகுகேரட் உருளை பச்சைப்பட்டானி (எல்லாம் சேர்த்து 1 கப்) காய்கறிகள் இரண்டு நிமிடங்கள் வதக்க.வும் பிறகு தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு இரண்டரைக்கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் ரவா 15 ஆம் தேதி 15 மாதங்கள் கூட இல்லை. ஒரு வேளை.

முந்திரி மசாலா

  முந்திரி -100 கிராம்.பச்சை பட்டானி -அரை கப்.வெங்காயம்- 2 .தக்காளி- 2-தேங்காப் பால் அரை கப். .எண்ணைய் 2 ஸ்பூன் .தேவையான அளவு உப்பு . மிக்ஸியில் மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்.மல்லித்தூள் -1ஸ்பூன் இஞ்சி. பூண்டு சிறிது(இது தனியாக அரைக்கவும்) பிறகு முந்திரி 7.வெள்ளரி விதை 2அரை ஸ்பூன் கசகசா சேர்த்து( தனியாக அரைக்கவும்) பிறகு வாணலியில் எண்ணைய் விட்டு நறுக்கிய வெங்காயம். தக்காளி வதக்கவும்  பின்பு மிளகாய்த்தூள்.மல்லித்தூள்(சக்தி மசாலா) .இஞ்சி.பூண்டு(அரைத்த)சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். பிறகு முந்திரி  பின்பு அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து பிறகு தேங்காய் பால். உப்பு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்  பிறகு கரமசால் தூவி இறக்கவும்.இப்ப முந்திரி மசாலா ரெடி

பன்னீர்பட்டர் மசாலா

  வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு  அரை ஸ்பூன் சீரகம் வெங்காயம்  4  தக்காளி  4 ( சிறிதாக நறுக்கவும் )சேர்த்து வதக்கவும். பின்பு  மிக்ஸியில் நைசாக அறைக்கவும். மசாலா ரெடி.  பிறகு வாணலியை அடுப்பில் வைத்து  வெண்ணை 100 கிராம் போட்டு அதில் கரமசால் பவுடர்  அரை ஸ்பூன். மஞ்சத்துள் அரை ஸ்யூன். மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் தேவையானளவு உப்பு சேர்த்து. பன்னீர் 100 கிராம் அளவு  சிறிய துண்டுகளாக  கட் செய்யவும்.(டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல ஐஸ் க்யூப் மாதிரி பன்னீர் வந்து கியூப் இருக்கும் அதையும் யூஸ் பண்ணலாம்)மசாலாவுடன் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில்  வைத்து இறக்கவும் .இப்ப  பன்னீர் பட்டர் மசாலா ரெடி.