மலாய் கொஃப்தா மசாலா தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2, உருளைக்கிழங்கு - 2, கேரட் - 2, மஞ் தாள்-Vடீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், கரம்மசாலா - % டீஸ்பூன், எண்ணெய் - 150 மிலி, உப்பு - தேவையான அளவு, சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன், பிரட்ஸ்லைஸ் - 4, லைம் ஜூஸ் ஒரு டீஸ்பூன். செய்முறை: உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் சுத்தம் செய்து வேசு வைத்து தனித்தனியாக மசித்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு கேரட்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து வதக்கி, பிரட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கலவையில் சேர்க்கவும். அடுப்பை அணைத்து லைம் ஜூஸ் கலந்து, சோளமாவுடன் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி. எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்க எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்- 3, தக்காளி - 2, மஞ்சள்தூள் டீஸ்பூன், மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன், பட்டை - 2, லவங்கம் - 2, உப்பு, கொத்துமல்லித்தழை - தேவையான அளவு. செய்முறை: பட்டை, லவங்கத்தை பொடித்துக் கொள்
2 கப் பொரி அடுப்பை பற்ற வைத்து. வாணலியில் இந்தப் பொரியை கரகரப்பாக வறுக்கவும்.பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு. வெறும் வாணலியில் ஒரு ஸ்பூன் மிளகு.ஒரு ஸ்பூன் சீரகம் வறுத்து நைசாக மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தது 4 காய்ந்த மிளகாய்.கருவப்பிலை. மஞ்சளதூள் அரை டீஸ்பூன். உப்பு தேவையான அளவு பிறகு பொடி செய்து வைத்திருக்கும்.மிளகு சீரகப்பவுடர் மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி பொரியையும் சேர்த்து.எல்லா பொரியிலும் உப்பு.காரம்கசேர்ந்து கரகரப்பாக இருக்கும் போது.பாத்திரத்தில் மாற்றவும்.காரப்பொரி ரெடி. (உப்பு.காரம் உங்களுக்கு தேவையான அளவு ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்துக் கொள்ளலாம்). இதேபோல் அவல் பொரிப்பொறி. சோளப்பொறி(இவை டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் சுத்தம்செய்து தரமானதாக கிடைக்கும் அதனை வாங்கி நம்முடைய விருப்பத்தின் போல் மொரமொரப்பாக) வறுத்துக் கொள்ளலாம். அனைத்திற்கும்.உப்பு. காரம் உங்களுடைய விருப்பம் போல் சேர்க்க வேண்டும்.