இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலிஃபிளவர் மஞ்சூரியன்

 காலிஃபிளவர் மஞ்சூரியன் தேவையானவை: காலிஃபிளவர் - 1, பெரிய வெங்காயம் 5, தக்காளி - கால் கிலோ, சோளம மிளகாய்த்தூள் - தலா 1 ஸ்பூன், வெங்காயத்தாள் - 3 (பொடியாக நறுக்கவும்), வினிகர் - 1 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் - 2, இஞ்சி, பூண்டு. விழுது - 1 ஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேனை அளவு. செய்முறை: உப்பு கலந்த நீரில் காலிஃபிளவரை 10 நிமிடம் கவிழ்த்து வக்கவும். பின்னர் அதை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிவிடவும். பின்னர் நறுக்கிய காலிஃபிளவரை சேர்த்து 3 நிமிடம் வேகவைத்து நீரை வடிக்கவும். பின்னர் அதை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளியை நீரில் சில நிமிடம் வேகவைத்து தோலுரித்து, அரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி வெங்காயத்தாள், இஞ்சி, பூண்டு விழுது, கீறிய பச்சைமிளகாய், பொரித்த காலிஃபிளவர் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளிச்சாறு, மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். சோளமாவுடன் சிறிதளவு நீர் விட்டு கரைத்து ஊற்றி, வி

குடைமிளகாய் ஃபிரை &வாழைக்காய் ஃப்ரை & பாகற்காய் ஃபிரிட்டர்ஸ்

 குடைமிளகாய் ஃபிரை தேவையானவை: குடைமிளகாய், தக்காளி - தலா 1. வெங்காயம் - 2, மிளகு சீரகத்தூள், தனியாத்தூள் - தலா 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், சதுரமாக நறுக்கிய குடைமிளகாயை போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகு, சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.  வாழைக்காய் ஃப்ரை தேவையானவை: வாழைக்காய் - 2, பிரெட் துண்டுகள் - 3, துருவிய காலிஃபிளவர் - அரை கப்,கரம்மசாலாத்தூள், மாங்காய்த்தூள், இட்லி மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், நெய் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு.  வாழைக்காய் தோல் சீவி வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து, நீரை பிழிந்து, அதை வாழைக்காயோடு சேர்க்கவும். பின்னர் நெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து, பிசைந்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான நெய்யில் பொரித்து எடுக்கவும். பாகற்காய் ஃபிரிட்டர்ஸ் தேவையானவை: பெரிய சைஸ் பாகற்காய் - 2, சோள மாவு, மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, சோ