பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

 பூண்டு மசித்த குழம்பு 


தேவையான பொருட்கள்


பூண்டு - 1/2 கப், சின்னவெங்காயம்-6, மிளகாய் வற்றல்- 6, புளி-2 டேபிள் ஸ்பூன், வெல்லம் சிறிது. சீரகம்-கடுகு, வெந்தயம்-தலா 1/2 டீஸ்பூன்.


செய்முறை

மிளகாயை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டு. வெங்காயம் வதக்கி அரைக்கவும். புளியைக்கரைத்து இத்துடன் அரைத்த விழுது, பொடி செய்த மிளகாய், வெல்லம் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். கடைசியாக சீரகம், கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.


இந்தக் குழம்பில் முழுப்பூண்டும். சேர்க்கலாம்.


சின்ன வெங்காயக்குழம்பு 

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம்- கப், பூண்டு-8 ஒரு பல், புளிப்பேஸ்ட்- 2 டேபிள்ஸ்பூன், தக்காளி-2, மிளகாய் வற்றல் - 6, தனியா-2 டீஸ்பூன், வெந்தயம்-1/2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு இன்ச், தே.துருவல்- 1/4 கப், கடுகு-1/2 டீஸ்பூன்.


செய்முறை


வாணலியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளியை வதக்கவும். மிளகாய், தனியா, வெந்தயம், இஞ்சி, தே.துருவலை வறுத்து அரைக்கவும். வதக்கிய பொருட்களுடன் புளிபேஸ்ட், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதித்தபின் அரைத்த பொருட்களைச் சேர்த்து கொதிவந்தவுடன் இறக்கி, கடுகு தாளிக்கவும்.


வெந்தய தோசைக்கு சரியான காம்பினேஷன் 


 சிறுகீரைக் குழம்பு


செய்முறை


சிறுகீரை- 2 கட்டு, தக்காளி-6, மிளகாய் வற்றல்-5, தனியா-2 டீஸ்பூன், பூண்டு-4 பல், மிளகு வெந்தயம்-தலா டீஸ்பூன் தே.பால்- ஒரு கப், சீரகம் ஒரு டீள்பூன்


கீரையையும், தக்காளியையும், பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், தனியா, பூண்டு, வெந்தயம், மிளகு இவைகளை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கீரை, தக்காளியை உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும், வெந்ததும் நன்றாக மசித்து அரைத்த விழுதையும், தே.பாலையும் விட்டு நன்றாகக் கொதித்ததும் சீரகம் தாளிக்கவும்.


குழைந்த சாதத்தில் பிசைந்து குழந்தைக்கு ஊட்டலாம்!


 அவிச்சகுழம்பு 


 தேவையான பொருட்கள்


பறங்கி, காராமணி, கொத்தவரங்காய், கத்தரி, அவரை, மொச்சை, வாழைக்காய் - 30 0 : கிராம், வெங்காயம்- ஒன்று, தக்காளி-3, புளிபேஸ்ட் - 21/2 டீஸ்பூன், ம.தூள் - 1/4டீஸ்பூன், மிளகாய் வற்றல், பூண்டு-தலா 8, தனியா-2 டீஸ்பூன், கடுகு, சோம்பு, வெந்தயம், சீரகம்-தலா 1/2 டீஸ்பூன்.


குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு புளி, நறுக்கிய காய்கறிகள், உப்பு போடவும். இத்துடன் வறுத்து அரைத்த மிளகாய், தனியா விழுது, நசுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து குக்கரை மூடவும். சிறு தீயில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கி கடுகு, சோம்பு, வெந்தயம், சீரகம் தாளித்துப் போடவும்.


குழந்தைகளும் சாப்பிடலாம் இந்தக் குழம்பை!

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா