பனீர் கோப்தா பிரியாணி &கோதுமை ரவை-மூலிகை பிரியாணி

 பனீர் கோப்தா பிரியாணி


தேவையானவை 3 பட்டை, கிராம்பு, ஏலக்காய்,


அரிசி ஒரு கப், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பனீர்த் துருவல் அரை கப், மிளகு, சீரகப்பொடி ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் 4, எலுமிச்சைச் - சாறு ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் தலா அரை டீஸ்பூன், பிரியாணி இலை - தாளிக்க, கொத்துமல்லித்தழை சிறி தளவு, சோள மாவு, உப்பு, எண்ணெய்-தேவையான அளவு.


செய்முறை


பனீர்த் துருவலுடன் உப்பு, மிளகு, சீரகப் பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, எலுமிச்சைச் சாறு சேர்த்து பிசறவும். பின்னர் சோள மாவு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், 'பனீர் கோப்தா' தயார்! அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மீதமுள்ள பச்சை மிளகாய்த் துண்டுகள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி, அரிசியை களைந்து சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு, முக்கால் பதம் வேகவிடவும். பின்னர் பனீர் கோப்தாக்களை சேர்த்து கலந்து, நன்றாக வேக வைத்து இறக்கவும்.


கோதுமை ரவை-மூலிகை பிரியாணி


கோதுமை ரவை - ஒரு கப், விருப்பமான காய்கறிக் கலவை அரை கப்,, இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், வெங்காயம் மேத்தி - 2 டீஸ்பூன், உப்பு, எண் ணெய் - தேவையான அளவு.


மூலிகை மசாலா செய்ய: சுக்குத்தூள், மிளகுத் தூள், சீரகத்தூள், கசகசா, அதி மதுரத் தூள்-தலா 1 டீஸ்பூன், நெல்லி முள்ளி, காய்ந்த மிளகாய்-தலா 5, கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி -தலா 4, காய்ந்த புதினா இலை ஒரு கைப்பிடி, பிரிஞ்சி இலை-ஒன்று, கொப்பரைத் துருவல்-2 டீஸ்பூன்.


தேவையானவை 


மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட் களை வெறும் வாணலியில் தனித்தனியே போட்டு, லேசாக வறுத்து ஆற வைக்கவும். பின்னர் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, உப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வெந்தய கீரையை கைகளில் தேய்த்து போட்டு, கோதுமை ரவையை சேர்த்து கிளறி, நன்றாக வெந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியை 2 டீஸ்பூன் அளவு சேர்த்து கிளறி இறக்கவும்.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா