இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மட்டர் பன்னீர் மசாலா

பட்டாணி ஒரு கப் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு. காய்ந்ததும் பட்டை. சீரகம். ஏலக்காய் .கிராம்பு .இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து .அதில் இரண்டு தக்காளி. 2 வெங்காயத்தை நைசாக பொடி செய்து சேர்க்கவும். பிறகு அதில் 1. ஸ்பூன் மிளகாய்தூள். 1 ஸ்பூன் மல்லித் தூள். அரை ஸ்பூன் சீரகம்.கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்.உப்பு சேர்த்து வேகவைத்த பட்டாணி.100 கிராம் பன்னீர் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் 10 முந்திரிப்பருப்பை நைசாக அரைத்து.குக்கரில் உள்ள கிரேவியில் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.எண்ணெய் பிரிந்து வெளியில் வரும்போது இறக்கவும்மட்டர் பன்னீர் மசாலா ரெடி. பாத்திரத்தில் மாற்றி இரண்டு ஸ்பூன் நெய் விடவும்.

டபுல் பீஸ் மசாலா

இஞ்சி 1துண்டு பூண்டு 4.பல் மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் தனியா தூள்1. ஸ்பூன் முந்திரிபருப்பு 10 மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் .அதில் சீரகம். கறிவேப்பிலை  .சோம்புத்தூள் அரை ஸ்பூன். கரம் மசாலா கால் டீஸ்பூன் தாளித்து அதில் வெங்காயம் 2. தக்காளி 2 சின்னதாக நறுக்கி அதில் சேர்க்கவும். பிறகு டபுள் பீஸ் தோலுரித்து 100.கிராம் . பட்டாணி ஒரு கப் .தண்ணீர் அரை டம்ளர். உப்பு .அரைத்த விழுது களையும் அதில் சேர்க்கவும் .பிறகு குக்கரை மூடி 2 விசில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து பிறகு குக்கரை திறந்து. இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். அதில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து பாத்திரத்தில் மாற்றி வைக்கவும் .டபுள் பீஸ் மசாலா ரெடி.

தால் சப்பாத்தி

கடலைப்பருப்பு1 கப் குக்கரில் தண்ணீர் விட்டு. ஒரு விசில் வைக்கவும் .பிறகு தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனுடன் 300 கிராம் சர்க்கரை .ஏலக்காய் பொடி 10 கிராம் சேர்த்து நைசாக அரைக்கவும். பிறகு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும் .1 கப் மைதா 1. கப் கோதுமை மாவு .உப்பு சேர்த்து  மாவுவை பிசைந்து வைக்கவும் . 15.நிமிடம் ஊறிய பிறகு சப்பாத்திகளாக செய்து.. நடுவில் பருப்பு சர்க்கரை சேர்த்து அரைத்து அந்த கலவையை இரண்டு ஸ்பூன் வைத்து. அதன் மேல் இன்னொரு சப்பாத்திகயைஅதன் மேல் வைத்து மூடி இரண்டு புறமும் நன்றாக தேய்த்து.  தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும். சப்பாத்திகளை அதன்மேல்மூடி  இரண்டு பக்கமும் சிவக்க வைத்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு எடுக்கவும். தால் சப்பாத்தி ரெடி

வாழைப்பூ தோசை

 தோசை மாவு 1.கப் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு ஒரு ஸ்பூன்.சீரகம் ஒரு ஸ்பூன் .வாழைப்பூ சுத்தம் செய்து உங்கள் விருப்பத்திற்கேற்ப வாழைப்பூ அதில் சேர்த்துக்கொள்ளவும் . நைசாக அரைத்து தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மெல்லியதாக தோசை ஊற்றி. ஒரு மூடி வைத்து மூடவும் .பிறகு அதில் ஒரு ஸ்பூன் நெய் தடவி .தோசையை மடித்து .ஒரு பிளேட்டில் வச்சுக்கவும். வாழைப்பூ தோசை ரெடி .தேங்காய் சட்னி .தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம்.

திராட்சை கிரேவி

 கறுப்பு திராட்சை அரைக்கிலோ வாணலியை அடுப்பில் வையுங்கள் அதில் 4 ஸ்பூன் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து முந்திரிப் பருப்பு 25 கிராம் சின்னதா கட் செய்து அதையும் அதில் சேர்த்து பிறகு திராட்சையை நறுக்கி சேர்க்கவும் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும் பிறகு அதில் சர்க்கரை 250 கிராம் சேர்க்கவும் சர்க்கரை கரையும் வரை வதக்கி நெய் பிரியும் போது இறக்கவும் திராட்சை கிரேவி ரெடி ஃப்ரெஞ்ச் ப்ரைஸ். பர்கர்.சமோசா .சப்பாத்தி. தயிர்சாதம் .இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்  இருக்கும்

பாசிப்பருப்பு பன்னீர் மசாலா

 பாசிப்பருப்பு 1கப் . வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் .பிரஷர் பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். கடுகு .சீரகம். கறிவேப்பிலை.  பச்சை மிளகாய் 3. மிளகாய்த்தூள்தூள் ஒரு ஸ்பூன் .காரம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சேர்த்துக் கொள்ளவும் .தக்காளி 4.சேர்த்து வதக்கவும் .அதனுடன் வெந்த பாசிப்பருப்பு .உப்பு தேவையான அளவு. பன்னீர் 200 கிராம் சின்ன சின்னதா கட் செய்து சேர்த்துக் கொள்ளவும் . பிறகு 5 நிமிடம் நன்றாக கொதிக்கவிட்டு  எண்ணெய் பிரிந்து வாசனை வரும்போது  மல்லித் தழை தூவி இறக்கவும் இட்லி தோசை சப்பாத்திக்கு நன்றாக இருக்கும் பயத்தம்பருப்பு பனீர் மசாலா ரெடி. 

நெல்லிக்காய் காரக்குழம்பு

  நெல்லிக்காய் 6 குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு  வேக வைக்கவும் .தண்ணீரை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும். மிக்ஸி ஜாரில்  நெல்லிக்காய் . பச்சை மிளகாய் 8 உங்களுக்கு தேவையானளவு காரம் சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் துருவி 2 ஸ்பூன் சேர்த்து. நைசாகஅரைக்கவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து. 2 குழி கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்.  அதில் பூண்டு 20. பல் தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு. கருவேப்பிலை. பூண்டு அதில் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு  நெல்லிக்காய் கிரேவி . சிறிது உப்பு .அரை டீஸ்பூன் மஞ்சள் தூள். ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து. நெல்லிக்காய் தண்ணீரை சேர்த்து. கிளறிவிட்டு .எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நெல்லிக்காய் காரக்குழம்பு ரெடி. சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.

பன்னீர் சப்பாத்தி

 கோதுமை மாவு 2 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும் 15 நிமிடம் ஊறவைக்கவும் சப்பாத்திகளாக இட்டு அதில் ஆம்சூர் பவுடர் அரை ஸ்பூன் துருவிய பன்னீர் 2 ஸ்பூன். கரம் மசாலா பவுடர் அரை டீஸ்பூன் அதன் மேல் தூவி மற்றுமொரு சப்பாத்தியை மூடி இரண்டு பக்கமும் நன்றாக 

பன்னீர் சாமை ஊத்தாப்பம்

 இட்லி அரிசி 3 கப் .சாமை ஒரு கப். உளுந்து ஒரு கப். சேர்த்து 5 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். அரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு மிளகு சீரகம் வருது பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம் தேவையான  பொடியாக  நறுக்கவும் .பன்னீரை துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு தோசை கல்லில் மாவை ஊற்றி அதன்மேல் நறுக்கிய வெங்காயம்.பன்னீர். மிளகு சீரகம் பொடி தூவி . அதன் மேல் எண்ணெய் விட்டு. இரண்டு பக்கமும்  வேகவத்து எடுக்கவும். பன்னீர் சாமை ஊத்தப்பம் ரெடி. இட்லி மிளகாய் பொடி .+காரச் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

ராஜ்மா குருமா

ஒரு கப் ராஜ்மா 7 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிரஷர் பன் அடுப்பில் வைக்கவும் அதில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதில் ஒரு டீஸ்பூன் சீரகம். கால் டீஸ்பூன் வெந்தயம்  பட்டை .சோம்பு சேர்த்து .நன்கு வதக்கவும். பிறகு 4 தக்காளிகளை நறுக்கி நன்றாக  கரையும் வரை வதக்கவும் .அதனுடன் மிக்ஸி ஜாரில் 2 வெங்காயம். இஞ்சி. பூண்டு நைசாக அரைக்கவும் .அதையும் தக்காளியுடன் சேர்த்து  பச்சை வாசனை போக நன்கு வதக்கவும் .பிறகு அதில் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள்.  சீரகத்தூள் அரை டீஸ்பூன்.மல்லித் தூள் ஒரு ஸ்பூன். கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன் .மஞ்சள்தூள் அரை டீஸ்பூன். உப்பு தேவையானளவு சேர்த்து .நன்றாக வதக்கி விட்டு. பிறகு வேக வைத்து ராஜ்மாவைஅதனுடன் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் விட்டு .15 நிமிடம் கொதிக்க வைத்து. எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும் . 2 ஸ்பூன் நெய் சேர்க்கவும் . ராஜ்மா குருமா  ரெடி.

முந்திரி மசாலா

முந்திரி பருப்பு 100 கிராம். இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். பிரஷர் பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் . பட்டை. கிராம்பு .இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். 2  வெங்காயத்தை நைஸாக அரிந்து வதக்கவும். 2 தக்காளி பொடியாக நறுக்கி வதக்கவும். தேங்காய் துருவி ஒரு கப் தேங்காய் பால் எடுத்து தனியாக வைக்கவும். மிக்ஸி ஜாரில் 8முந்திரி பருப்பு. கசகசா அரை டீஸ்பூன் சேர்த்து நைசாக அரைக்கவும் . தக்காளி நன்றாக வதங்கியதும். அதில் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள். மல்லித்தூள் . தேவையான அளவு உப்பு சேர்த்து. அரைத்து வைத்துள்ள முந்திரி மசாலா. தேங்காய் பால்   சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து. கெட்டியானவுடன் இறக்கவும். முந்திரி மசாலா ரெடி பரோட்டா பூரிக்கு  சாப்பிடலாம்

லட்டு (ரத்தத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும்)

 நிலக்கடலை 100 கிராம். உலர்ந்த திராட்சை 100 கிராம். முந்திரி பருப்பு 100 கிராம். வெல்லம் 25 கிராம். (உங்களுக்கு தேவையான அளவு) பேரிச்சம் பழம் 100 கிராம். வெண்ணைய் 10 கிராம் இவை அனைத்தையும். மிக்ஸியில்  நைஸாக அரைத்து. பாத்திரத்தில் மாற்றி சிறு சிறு உருண்டைகளாக  உருட்டி ஒரு டப்பாவில் அடைத்து.   பிரிட்ஜில் வைக்கவும். தினமும் ஒரு உருண்டை எடுத்து சாப்பிட்டால் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும் . லட்டு ரெடி.

தம் ஆலு

 உருளைக்கிழங்கு 500 கிராம் தோல் சீவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி. எண்ணெய் காயவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 5 காய்ந்த மிளகாய் .ஒரு டீஸ்பூன் மிளகு. ஒரு டீஸ்பூன் சீரகம். பட்டை. கிராம்பு.  வெறும் வாணலியில் வறுத்து. மிக்ஸியில் நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு. அதில் இஞ்சி. பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். வெங்காயம் கால் கிலோ அளவுக்கு பொடிதாக நறுக்கி வதக்கவும் .அதில் இரண்டு தக்காளி பழம் நறுக்கி  வதக்கவும். பிறகு 2 ஸ்பூன் தயிர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும் .நன்கு சுருண்டு வரும்போது.  உருளைகிழங்கை அதில் சேர்த்து( உப்பு காரம் அனைத்தும் உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளவும்) 10 நிமிஷம்  அதை சிம்மில் வைத்து. எண்ணைய் பிரிந்த சுருண்டு வரும்போது இறக்கவும். தம் ஆலு ரெடி.

பட்டர் பரோட்டா

மைதா மாவு 2 கப். வெண்ணெய் 50 கிராம். எண்ணைய். சிறிதளவு உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதை இழுத்துப் பிசைந்து  எண்ணைய் தொட்டு சப்பாத்தி போல் இடவும். நீளவாக்கில் பீஸ் பீஸாக போட்டு.அதை ஒரு கொத்து போல பிடித்து சுத்தி. பிறகு அதை  பரோட்டா சுற்றுவதுபோல்  இறுக்கமாக சுருட்டி வைக்கவும் அதன் மேல் எண்ணெய் தடவி ஐந்து நிமிடம் வைக்கவும். சிறிது நேரம் கழித்து சப்பாத்தி போல் தேய்த்து. தோசைக்கல்லில்  மிதமான தீயில் இருபுறமும் வேகவைத்து .பரோட்டாவை தட்டி எடுத்து வைக்கவும். பட்டர் பரோட்டா ரெடி.   பட்டர் பரோட்டாவுக்கு சால்னா எப்படி செய்வது அடுத்து பார்க்கலாம் .

குல்சா

ஒரு கப் மைதா மாவுடன். ஒரு ஸ்பூன் சர்க்கரை.  சமையல் சோடா. உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும். பிறகு நான்கு உருளைக்கிழங்கை வேக வைத்து. மசித்து தோலுரித்து  எடுத்துக் கொள்ளவும் .மிக்ஸி ஜாரில் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் .கொத்தமல்லி  கால் கப் .மாதுளை விதைகள் சிறிதளவு. இவை அனைத்தையும் மிக்ஸியில் ரவை பழக்கததிற்கு அரைக்கவும் .பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து .ஒரு சுற்று சுற்றி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் .மசாலா ரெடி .பிறகு நாம் பிசைந்து வைத்துள்ள  மைதா மாவை சப்பாத்திகளாக இட்டு .அதில் இந்த மசாலாவை நடுவில் வைத்து மூடி. இரண்டு பக்கமும் தேய்து  சப்பாத்திகளாக இட்டு .தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளாக போட்டு எடுக்கவும் இரண்டு புறமும் சிவந்தவுடன் அதன் மேல் நெய் தடவி எடுத்து வைக்கவும் .குல்சா ரெடி.

கோதுமை மாவு ரொட்டி

 அரைக் கப் பயத்தம் பருப்பு தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து. தண்ணீரை வடித்து அதனுடன் மிளகு. சீரகம். இஞ்சி. உப்பு .மஞ்சள் தூள் சேர்த்து .மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும் .பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை. மாவு உப்பு கால் கப் ரவை சேர்த்து.சப்பாத்தி சுடுவது போல பிசைந்து வைக்கவும் .சிறிது நேரம் கழித்து அந்த சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி. சப்பாத்திகளை செய்யவும். அதன் மேல் நாம் செய்து வைத்திருந்த கலவையை அது மேல்  வைத்து மூடி இரண்டு பக்கமும் நன்றாக தேய்த்து .சப்பாத்தி செய்து. தோசைக்கல்லில் இரண்டு புறமும் சுட்டு எடுக்கவும் . கோதுமை மாவு ரொட்டி ரெடி.

இனிப்பு போலி

 மைதா மாவு 2 கப் .கேசரி பவுடர் சிறிது சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.  கடலைப்பருப்பு ஒரு கப். வெறும் வாணலியில் வறுத்து  ஊற வைங்கவும்.  பிறகு தண்ணீரை வடித்துவிட்டு வெல்லம் 2 கப். தேங்காய் துருவல் ஒரு கப். ஏலக்காய் சேர்த்து மிக்ஸியல் ரவை பதத்துக்கு அரைக்கவும். பிறகு வாணலியில் 2 குழிக்கரண்டி நெய் விட்டு .அரைத்த கலவையை அதில் சேர்த்து நன்கு கிளறி. நெய் பிரிந்து வரும் போது இறக்கவும். மைதா மாவை சப்பாத்தி போல் வட்டமாக தேய்த்து. நடுவில் பூரணத்தை வைத்து மூடி  வட்டமாகத் தேய்த்து. சப்பாத்தி போல் தோசைக்கல்லில் சுட்டு எடுக்க வேண்டும். அதன் மேல் நெய் தடவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இனிப்பு போளி ரெடி.

காரக்குழம்பு

 7 காய்ந்த மிளகாய். 2 ஸ்பூன்  மிளகு ஒரு ஸ்பூன். சீரகம் ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு நல்லா வறுத்து நைஸாக பொடி செய்து வச்சிருங்க. எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து .கரைத்து ஒரு கப் எடுங்க. வாணலியை அடுப்பில் போட்டு. நல்லெண்ணெய் 2 குழிக்கரண்டி விடுங்க. காய்ந்ததும் கடுகு. வெந்தயம். துவரம்பருப்பு ஒரு ஸ்பூன் அதில் சேர்த்து வதக்குங்க. கலர் மாறியதும் .பூண்டு 10 பல்  . சின்ன வெங்காயம் 10. பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் சேர்த்து நல்லா வதக்குங்க கலர் மாறியதும் .  அதில் தேவையான அளவு உப்பு சேருங்கள் நம்ம பொடி செய்து வச்சிருந்தபவுடர்  அதையும் சேர்த்து. நல்ல கிளறி விட்டு ஒரு மூடி போட்டு மூடி வைக்கவும்.குழம்பு எண்ணைய் பிரிஞ்சு வெளியில் வரும்போது இறக்குங்க.  கார குழம்பு ரெடி.  ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு இந்த குழம்பு வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்

மசாலா சப்பாத்தி

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு. எண்ணெய் காய்ந்ததும் .சோம்பு அரை டீஸ்பூன்.  வெங்காயம் 2 .தக்காளி 2 பொடியாக நறுக்கி. எண்ணெயில் வதக்கவும். ஒரு ஸ்பூன் மிளகாய் தூள். ஒரு ஸ்பூன் மல்லித் தூள். அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள். அரை டீஸ்பூன் மஞ்சள் தூள். சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு  உப்பு சேர்த்து. வதக்கி வைத்திருக்கும் மசாலாவை அந்த மாவில் சேர்த்து  சப்பாத்தி மாவு பிசையவும். பிறகு 15 நிமிடம் கழித்து அதை சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் சப்பாத்தி போட்டு எடுக்கவும்.  மசாலா சப்பாத்தி ரெடி. தேங்காய் சட்னி அல்லது குருமாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

தேங்காய் இல்லாத குருமா +பீஸ் மசாலா

 வெங்காயம் 3 வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி ஆற வைக்க. கிராம்பு 3 .பட்டை ஒரு துண்டு. பொட்டுகடலை சிறிது (இல்லன்னா) முந்திரி பருப்பு 8.  மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். மல்லித் தூள் ஒரு ஸ்பூன். கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். இது எல்லாத்தையும். ஆற வைத்த வெங்காயம்  சேர்த்து நைசாக அரைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து. எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தது.ம் சிறிது  சோம்பு .இஞ்சி பூண்டு பேஸ்ட்  போட்டு நல்லா வதக்கி. (பச்சை வாசனை போக) அப்புறம் ஒரு கப் பச்சை பட்டாணியை சேர்த்து நல்லா வதக்கவும். மிக்ஸியில் அரைத்து வைத்திருந்த கிரேவி    சேர்த்து. தேவையான அளவு உப்பு காரம் 1டம்ளர் தண்ணீர் சேர்த்து  குக்கரை மூடி மூன்று  விசில்  வைங்க. சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து. அதுக்கப்புறம் அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கி .ஒரு பாத்திரத்தில் மாற்றி 1கரண்டி தயிர் (உங்களுக்கு விருப்பமான அளவு )அதுல சேருங்க. பீஸ் மசாலா ரெடி.