முட்டைக்கோஸ்குருமா&வெள்ளை' குருமா

 முட்டைக்கோஸ்குருமா

தேவையானவை: முட்டைக்கோஸ் ஒரு கப், எண்ணெய் - 10 டேபிள் ஸ்பூன், சிறியதாக நறுக்கிய உருளைக்கிழங்கு 4 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, சீரகம் ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, பட்டை - சிறிய துண்டு, மல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த்துருவல் - கால் கப், பச்சைமிளகாய் - 2, கசகசா - அரை டீஸ்பூன், தக்காளி - ஒன்று.


செய்முறை: நறுக்கிய முட்டைக்கோஸுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கை பொரித்து, தனியே வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் பிரிஞ்சி இலை, பட்டை, சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, வெந்த முட்டைக்கோஸைச் சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து இரண்டு கொதி விட்டு, பொரித்த உருளை, கொத்துமல்லித்தழை சேர்த்து இறக்கவும். குறிப்பு: சப்பாத்தி / பூரி / ரொட்டிக்கு ஏற்றது.


வெள்ளை' குருமா

தேவையானவை: நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் (மூன்றும் சேர்த்து) - ஒரு கப், பச்சைப்பட்டாணி - கால் கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன். அரைக்க: பச்சைமிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, பெரிய வெங்காயம் ஒன்று, முந்திரித்துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்,, கசகசா, சோம்பு தலா அரை டீஸ்பூன், தனியா ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் அரை கப்


செய்முறை: உருளை, கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி இவற்றுடன் உப்பு சேர்த்து வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நீர்விட்டு கெட்டியாக நைசாக அரைக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, வேகவைத்த காய்கறிகளை நீருடன் சேர்த்து ஊற்றவும். தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். (மேலும் இன்னும் பல  சமையல்கள் என்னுடைய  மற்றொரு ப்ளாக் பார்க்கவும்.

https://www.kalaireal360.xyz/)

குறிப்பு: இடியாப்பம் / சப்பாத்தி / நாணுக்கு சிறந்த காம்பினேஷன் 

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா