பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு
பூண்டு மசித்த குழம்பு தேவையான பொருட்கள் பூண்டு - 1/2 கப், சின்னவெங்காயம்-6, மிளகாய் வற்றல்- 6, புளி-2 டேபிள் ஸ்பூன், வெல்லம் சிறிது. சீரகம்-கடுகு, வெந்தயம்-தலா 1/2 டீஸ்பூன். செய்முறை மிளகாயை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டு. வெங்காயம் வதக்கி அரைக்கவும். புளியைக்கரைத்து இத்துடன் அரைத்த விழுது, பொடி செய்த மிளகாய், வெல்லம் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். கடைசியாக சீரகம், கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும். இந்தக் குழம்பில் முழுப்பூண்டும். சேர்க்கலாம். சின்ன வெங்காயக்குழம்பு தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம்- கப், பூண்டு-8 ஒரு பல், புளிப்பேஸ்ட்- 2 டேபிள்ஸ்பூன், தக்காளி-2, மிளகாய் வற்றல் - 6, தனியா-2 டீஸ்பூன், வெந்தயம்-1/2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு இன்ச், தே.துருவல்- 1/4 கப், கடுகு-1/2 டீஸ்பூன். செய்முறை வாணலியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளியை வதக்கவும். மிளகாய், தனியா, வெந்தயம், இஞ்சி, தே.துருவலை வறுத்து அரைக்கவும். வதக்கிய பொருட்களுடன் புளிபேஸ்ட், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதித்தபின் அரைத்த பொருட்களைச்