உருளை கேப்ஸிகம் குருமா&பஜ்ஜி மிளகாய் - ஸ்வீட்கான் குருமா

 உருளை கேப்ஸிகம் குருமா


தேவையானவை: பெரிய சைஸ் உருளைக்கிழங்கு, குடைமிளகாய், பெரிய வெங்காயம் தலா ஒன்று, தக்காளி - 2, உப்பு - தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் 2. மசாலா பவுடர்கள்: மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், தனியா பவுடர் ஒரு டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன். வெறும் வாணலியில் வறுத்து அரைக்க: வேர்க்கடலை, முந்திரித் துண்டுகள் - தலா ஒரு டேபிள் ஸ்பூன்,


சோம்பு - அரை டீஸ்பூன். செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து


அரை வேக்காடாக வேகவிட்டு தனியே வைக்கவும். வெறும் வாணலியில் வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, மெலிதாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மசாலா பவுடர்கள், உப்பு சேர்த்து வதக்கி, அரை வேக்காடாக வெந்த உருளையை நீருடன் சேர்த்துக் கலந்து, பாத்திரத்தை மூடவும். காய்கள் நன்றாக வெந்ததும், அரைத்த விழுது, நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.


குறிப்பு: நாண் / புல்காவிற்கு தொட்டுக்கொள்ளவும்

 பஜ்ஜி மிளகாய் -ஸ்வீட்கான்குருமா

      தேவையானவை: வேகவைத்து உதிர்த்த ஸ்வீட்கார்ன் ஒரு கப், உப்பு - தேவைக்கு, பஜ்ஜி மிளகாய் 2, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன். அரைக்க: தக்காளி 2,உடைத்த - முந்திரித் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன். மசாலா பவுடர்கள்: மிளகாய்த்தூள், தனியா பவுடர் தலா ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன். தாளிக்க: நெய் 2 டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன். மேலே தூவ: நறுக்கிய கொத்துமல்லித்தழை 2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை: வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, மசாலா பவுடர்களை வத அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத் அதையும் சேர்த்து வதக்கி, உப்பு, வெ ஸ்வீட்கார்ன், நறுக்கிய பஜ்ஜி மிளகாய் சேர் வதக்கவும். பின்னர் கால் கப் தண் ஊற்றி கொதிக்க விடவும். இரண்டு கெ வந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற் போட்டு தாளித்துச் சேர்த்து, மறுபடியும் கொதி வந்ததும் இறக்கி, கொத்துமல்லித்த தூவவும்.


குறிப்பு: பஜ்ஜி மிளகாய்க்குப் பதில குடைமிளகாய் சேர்த்தும் செய்யலாம். சப்பாத்தி புல்காவுக்கு தொட்டுச் சாப்பிட ஏற்றது.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா