காலிஃபிளவர் மஞ்சூரியன்

 காலிஃபிளவர் மஞ்சூரியன்

தேவையானவை:

காலிஃபிளவர் - 1, பெரிய வெங்காயம் 5, தக்காளி - கால் கிலோ, சோளம மிளகாய்த்தூள் - தலா 1 ஸ்பூன், வெங்காயத்தாள் - 3 (பொடியாக நறுக்கவும்), வினிகர் - 1 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் - 2, இஞ்சி, பூண்டு. விழுது - 1 ஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேனை அளவு.


செய்முறை:

உப்பு கலந்த நீரில் காலிஃபிளவரை 10 நிமிடம் கவிழ்த்து வக்கவும். பின்னர் அதை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிவிடவும். பின்னர் நறுக்கிய காலிஃபிளவரை சேர்த்து 3 நிமிடம் வேகவைத்து நீரை வடிக்கவும். பின்னர் அதை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளியை நீரில் சில நிமிடம் வேகவைத்து தோலுரித்து, அரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி வெங்காயத்தாள், இஞ்சி, பூண்டு விழுது, கீறிய பச்சைமிளகாய், பொரித்த காலிஃபிளவர் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளிச்சாறு, மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். சோளமாவுடன் சிறிதளவு நீர் விட்டு கரைத்து ஊற்றி, வினிகரை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கவும். நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவி, எலுமிச்சைச்சாறை விட்டு பரிமாறவும். 

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா