சப்பக்கி இட்லி & சாமை இட்லி

 தேவையானவை:


இட்லி அரிசி ரவை, நைலான் ஜவ்வரிசி தலா ஒரு கப், புளித்த தயிர் - 2 கப், தேங்காய்த்துருவல் - கால் கப், கடுகு ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் 5, முந்திரி - 20, கறிவேப்பிலை - 2 கொத்து, கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு, உப்பு, தண்ணீர் - தேவைக்கு.


செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி அரிசி ரவை, ஜவ்வரிசி,


புளித்த தயிர், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்தை விட சற்று நீர்க்க கரைக்கவும். இந்த மாவை 8 மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் இதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். வாணலியில் கடுகு தாளித்து, முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் தேங்காய்த்துருவலை சேர்த்து கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் லேசாக எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, 12 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


 சாமை இட்லி


தேவையானவை: சாமை - 4 கப், உளுந்தம் பருப்பு ஒரு கப


வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - செய்முறை: சாமையை மூன்று மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைக்கவும். உளுந்தம் பருப்பையும் வெந்தயத்தையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் தெளித்து, பொங்க பொங்க நன்றாக அரைத்தெடுக்கவும். இதனுடன் அரைத்த சாமை மாவை கலந்து, உப்பை சேர்த்து, 9 மணி நேரம் புளிக்கவிடவும். இட்லித் தட்டில் லேசாக எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை, ஊற்றி 15 நிமிடம் ஆவியில் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா