சோயா பிரியாணி ரெடி

தேவையானவை: பச்சரிசி - 2 கப், சோயா சங்க்ஸ் - 100 கிராம், பச்சை மிளகாய் - 3, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு - தலா 3, எண்ணெய் - 4 டீஸ்பூன், கொத்துமல்லி மேலே தூவுவதற்கு சிறிது, உப்பு - தேவையான அளவு. செய்முறை: இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் அதில் சோயாவைப் போட்டு, சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் வேக விடவும். வெந்தவுடன் சோயாவை எடுத்து ஆறவைத்து பிறகு நீரை பிழிந்து விடவும்.. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதைப் போட்டு சில நொடிகள் வதக்கவும். பச்சை வாடை சற்று போனவுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள சோயாவை அதில் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும். இரண்டு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து, இதனுடன் அரிசி, சோயா கலவை, உப்பு சேர்த்து கிளறிவிட்டு, குக்கரை மூடி வேக விடவும். (ஒரு கப் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு பதிலுக்கு ஒரு கப் தேங்காய்ப்பால் கூட சேர்க்கலாம்) மூன்று விசில் வந்தவுடன் இறக்கி, ஆவி அடங்கியவுடன் எடுத்து, விரும்பினால் சிறிது நெய்விட்டுக் கிளறி, சிறிது கொத்துமல்லித் தழையினை மேலே தூவவும். எளிதான, சுவையான சோயா பிரியாணி தயார்!

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா