கொத்துமல்லி பிரியாணி தயார்..

தேவையானவை: பாசுமதி அரிசி ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - 2. வெங்காயம் - 1, எண்ணெய் 2 டேபிள்ஸ்யூன், தேங்காய்ப்பால் - அரை கட்ட கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பிரியாணி இலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. அரைக்க: . பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு. 6.தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன். பட்டை லவங்கம் - தலா 2. செய்முறை: அரைக்க கொடுத்தவற்றை நைஸாக அரைக்கவும். அரிசியைக் களைந்து கால் மணி நேரம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தோல் உரித்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலா மற்றும் தூள் வகைகள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் தேங்காய்ப்பால் ஊற்றி மீதத்திற்கு நீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க துவங்கியதும் அரிசி சேர்த்து கலந்து விடவும். மீண்டும் கொதிக்க துவங்கியதும் மூடி சிறு தீயில் வைத்து வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சுவையான கொத்துமல்லி பிரியாணி தயார். ரைத்தாவுடன் பரிமாறலாம்.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா